ஆறாம் பாவ பலன்கள்

//ஆறாம் பாவ பலன்கள்

ஆறாம் பாவ பலன்கள்

aaraam

ஆறாம் பாவம்

லக்னத்திற்கு ஆறாம் வீடு ரோகஸ்தானம் அல்லது பகைஸ்தானம் என அழைக்கப் படுவதை நாம் அறிவோம். சத்துரு, நோய், இடையூறு, அடிபடுதல் முதலியவற்றைக் குறிக்கும் இடமாகும்.

மேஷம் ஆறாம் இடமானால் தெளிவான சிந்தனை, பகைவர்களை அழித்தல், செய்யும் காரியங்களில் வெற்றி, கன்று, மாடு, தனம், சேர்கை, செல்வாக்குப் பெறுதல் ஆகிய அமைப்புகளை ஜாதகர் பெறுவார்.

ரிஷபம் ஆறாம் இடமானால் கால் கால்நடைகள் விஷயத்தில் எப்பொழுதும் சண்டை, தன் மக்களாலும், மக்கள் வர்க்கத்தாலும் அடிக்கடி சண்டை ஏற்படும். பெண்களின் செர்கையாலும் உறவினர்களாலும் மகிழ்ச்சி உண்டு.

மிதுனம் ஆறாம் இடமானால் எப்பொழுதும் பெண்களால் வம்பு சண்டை விரோதம் இருக்கும்.. பலருடைய பாபத்திற்கு ஆளாக நேரிடும். இருபினும் வியாபாரத்தில் தொடர்புடையவர்களாலும், தாழ்ந்த ஜனங்களின் சிநேகிதத்தாலும் நன்மை உண்டு.

கடகம் ஆறாம் இடமானால் சகோதர்களும், புத்திரர்களும் அதிகம் உடையவன்; வைதீகத்தில் சிறந்தவர்களுடன் நட்பு கொண்டவனாக இருந்தாலும் பொதுமக்களுக்கு விரோதியாக அமைகின்றான்.

சிம்மம் ஆறாம் இடமானால் தனது மகளுடன் தீராத விரோதம் உடையவன், பந்து ஜனங்களுடன் அவ்வாறே சண்டை சச்சரவு உடையவன். பொருள் வரவு நிறைய இருந்தாலும் அவை வந்த வழி தெரியாமல் செல்வதும் இந்த அமைப்பின் பலனாகும். வரவும் செலவும் பெரும்பாலும் பெண்களால் ஏற்படக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னி ஆறாம் இடமானால் ஜாதகன் சாதுக்களிடதிலோ தர்ம காரியங்களிலோ ஈடுபாடு கொள்வதில்லை. மாறாக அவற்றில் வெறுப்பு கொள்ளவும்.செய்கின்றான். வீட்டிலும் வெளியிலும் எப்பொழுதும் இவனுக்கு எதிரிகள் இருப்பர்கள்.

துலாம் ஆறாம் இடமானால் தன் முதலாளியோடு முரன்பாடு கொள்பவர்கள். கெட்ட நடத்தையுள்ள பெண்களாலும் சொந்த மனைவியாலும் எப்பொழுதும் தொல்லை இருக்கும்.

விருசிகம் ஆறாம் இடமானால் பிராமணர்களுக்கு எதிரியாவான். பலவிதமான பாம்புகளால் இவன் அவதிப்பட நேரிடும். மதம் பிடித்த யானைகளாலும் ஜாதகனுக்கு தொந்தரவு ஏற்படும். திருடர்கள் இவனுடைய பொருளை அபகரித்து செல்வர்.குதிரை முதலிய வாகனங்களால் சில சமயங்களில் பீடை ஏற்ப்படும். பெண்களாலும் தொல்லைகள் உண்டு.

தனுசு ஆறாம் இடமானால் வேடர்கள் வில்லேந்தியவர்கள், குதிரைகள், யானைகள் மற்றும் அசையும் பொருள்கள் அசையாப் பொருள்கள் ஆகியவற்றால் தொல்லைகள் இருந்து கொண்டிருக்கும். ஜாதகரை ஏமாற்றிப் பொருளை பறித்து செல்பவரும் உண்டு.

மகரம் ஆறாம் இடமானால் கொடுக்கல் வாங்கல் மூலம் தகராறு, வீட்டு மனைகளின் மேல் தொல்லைகள், ச்நேகிதபகை ஏற்படும். சாதுக்கள் கூட இவனை நல்லவன் என கூற மாட்டார்கள்.

கும்பம் ஆறாம் இடமானால் குளம் ஆறு முதலிய நீர் நிலைகளில் இறங்கி குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனக்கு ஆதரவாக இருக்கும் முதலாளியிடம் பகை ஏற்ப்படலாம்.

மீனம் ஆறாம் இடமானால் தன் மக்களாலும் மனைவி மூலம் பிற உறவினர்களிடமும் பகை ஏற்படும். ஜாதகரும் அவர் தந்தையும் காலம் முழுவதும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே வாழ்வர்

 

ஆறுக்குடையவன் அந்தந்த ராசிகளில் இருப்பதன் பங்கு

ஆறுக்குடையவன் லக்னத்தில் இருந்தால் நல்ல பலமுடையவன். பகைவர்கள் இவனை ஒன்றும் செய்ய முடியாது. மாடு கன்று வசதி உடையவன். ஆனாலும் சொந்தக்காரர்களால் துன்பத்திற்கு ஆளாவான்.

ஆறுக்குடையவன் இரண்டாம் வீட்டில் இருந்தால் கெட்டிகாரன். கொடூர வார்த்தைகள் பேசுவான்.செல்வம் சேர்ப்பதில் திறமைசாலி. பலருக்கு மத்தியில் புகழோடு வாழக் கூடியவன். இருப்பினும் மனதை வீணாகக் குழப்பிக் கொள்பவன். அடிகடி வரும் நோயினால் உடல் இளைத்தவன்.

ஆறுக்குடையவன் மூன்றாம் பாவத்தில் இருந்தால் வஞ்சனை உள்ளவர்களிடம் கூடியிருபவன். பல தொழில் செய்பவன். தகப்பனார் தேடி வைத்த சொத்துகளை நாசம் செய்பவன். அதிகமான கோபமுடையவன். இருபினும் உடனே கோபம் தணிந்து சாந்த நிலைக்கு வரக்கூடியவன்.

ஆறுக்குடையவன் நான்காம் ராசியில் இருந்தால் தந்தையின் பக்கம் சேர்ந்து கொண்டு குடும்பத்திற்கு கலகம் விளைவிப்பன். தந்தையினாலும் மகனாலும் பொருள் வரவு உடையவன். உடல் வலிமை உள்ளவன். சபல உள்ளம் படைத்தவன்.எப்பொழுதும் சரீரத்தில் நோய் நலிவு உடையவன்.

ஆறுக்குடையவன் 5 ஆம் பாவத்தில் இருந்தால் தந்தையோடும் மக்களோடும் ஓயாமல் சண்டை இடுபவன். பாபக் கிரகங்களின் சேர்கை இருந்தால் இளம் புத்திரர்கள் சுபகிரக யோகமிருந்தால் யாவராலும் பாராட்டத் தகுந்தவனாகவும் செல்வம் மிக்கவனாகவும் திகழ்வான்.

ஆறுக்குடையவன் ஆறாம் பாவத்திலேயே இருந்தால் சொந்த ஊரில் சுகமுடையவன் மக்கட்பேற்றில் பிரியமுடையவன்கஞ்சன் துஷ்டன் சிநேகிதம் உடையவன். அவர்களால் தொல்லையையும் சந்திக்க கூடியவன்.

ஆறுக்குடையவன் 7 ஆம் பாவத்தில் இருந்தால், பாவக் கிரகத்துடன் சேர்ந்திருந்தால் எதற்க்கெடுத்தாலும் வாதம் செய்கிறவன். பெண் பித்தன். பகையினால் விஷத்தையும் தருபவன். சுபகிரகங்களுடன் சேர்ந்திருந்தால் நல்ல அழகு மிக்க மக்களை உடையவன்.

ஆறுக்குடையவன் எட்டாம் பாவத்தில் இருந்தால் வயிற்றுக் கோளாறினாலோ, விஷத்தினாலோ மரணம் அடைவான்.

ஆறுக்குடையவன் சூரியனாகி எட்டில் இருந்தால் அரசனாவான்.

ஆறுக்குடையவன் சந்திரனாகி எட்டில் இருந்தால் அற்ப ஆயுள். திடீர் மரணம் ஏற்படும்.

ஆறுக்குடையவன் குருவாகவோ, சுக்ரனாகவோ அமைந்து எட்டில் இருந்தால் கண் மூலம் ஆபத்து நேரிடும்.

ஆறுக்குடையவன் 9 ஆம் பாவத்தில் பகை கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் கால்களுக்குப் பங்கம் ஏற்படும். புத்திரன் இருக்க மாட்டான். செல்வம் சேராது. எந்த விதமான சுகமும் இராது.

ஆறுக்குடையவன் 1௦ ஆம் பாவத்தில் இருந்தால் பெற்ற தாயுடன் ஓயாமல் வழக்காடுவான். சபல புத்தி உள்ளவன். துஷ்டன், சுபகிரகங்களுடன் கூடினால் தம்மை வைத்து காப்பாற்றக் கூடிய மகனை பெறுவான்.தன் தந்தைக்கு எதிரியாக இருந்தாலும் தாயை காப்பாற்றுவான்..

ஆறுக்குடையவன் 11 ஆம் இடத்தில இருந்தால் துஷ்டர்களின் சேர்கையுடையவன் அரசினாலும் திருடர்களினாலும் இவனுடைய பொருள் பறிபோகும். சத்துருவின் மூலம் மரணம் உண்டாகும். சுபகிரகத்துடன் கூடினால் சுபகாரியங்களையே செய்பவன் ஆகின்றான்.

ஆறுக்குடையவன் 12 ஆம் பாவத்தில் இருந்தால் கன்று மாடு முதலிய கால்நடை செல்வங்களை இழப்பான். தன தான்ய சுகம் இவனுக்கு இல்லை. எப்பொழுதும் ஊர் சுற்றியாகவே இருக்க பிரியப்படுவான். இரவு பகல் பாராமல் தனம் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பான்.

ஆறாம் இடத்தை இதர கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.

ஆறாம் இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் பகைவர்கள் இவனிடம் தலை காட்ட முடியாது. வலது கண்ணில் ரோகம் உடையவன். தாயின் மூலம் இவனுக்கு சுகம் இல்லை.

ஆறாம் இடம் சந்திரனால் பார்க்கப்பட்டால் பகை மேல் பகை வரும். சுபம் வரும்.

ஆறாம் இடம் செவ்வாயால் பார்க்கப்பட்டால் ஜாதகரின் பகைவர்கள் நாசமாவர்கள். அம்மான் மூலமும் இரும்பு ஆயுதங்களினாலும், அக்னியினாலும் எப்பொழுதும் ஆபத்து உண்டு.

ஆறாம் இடம் புதனால் பார்க்கப்பட்டால் எத்தகைய பகையையும் எதிர்த்து அழிப்பான். அம்மான் மூலம் சுகமடைவான். கடினமான காரியத்தையும் எளிதாக முடிப்பவன். பிறரிடம் குற்றம் சொல்பவன்.

ஆறாம் இடம் குருவினால் பார்க்கப்பட்டால் பகைவர் பெருகுவர். செல்வம் சீரழியும். அம்மானால் தொல்லைகள் ஏற்படும்.

ஆறாம் இடம் சுக்ரனால் பார்க்கப்பட்டால் தாய் மாமனால் நிறைந்த சுகம். பகைவனை நாசம் செய்யக் கூடியவன். மக்களால் போற்றப்படுபவன்.

ஆறாம் இடம் சனியினால் பார்க்கப் பட்டால்,சத்ருக்களுக்கு நாசத்தை செய்கிறவன். அம்மானுடன் கூடினவன். கண் முகம் கால் இவற்றில் ரணபீடை உள்ளவன். தடிப்பான வார்த்தை பேசுபவன். காய்ச்சல் மயக்கம் இவற்றால் அடிக்கடி பீடிக்கப்படுபவன்.


பொதுவாக ஜோதிடத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுது பின்வரும் கேள்விகள் மனதில் எழும்:

 • எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்?
 • எனக்கு காதல் திருமனம் நடக்குமா அல்லது பெற்றோர் பார்த்து திருமனம் நடக்குமா?
 • எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்?
 • எனக்கு வீடு கட்ட உகந்த காலம் எது?
 • எனக்கு புத்திர பாக்கியம் உண்டா? எப்பொழுது கிடைக்கும்
 • என் கடன் பிரச்சனைகள் எப்பொழுது தீரும்?
 • எந்த தொழில் அல்லது வியாபாரம் எனக்கு உகந்தது?
 • நன் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க முடியுமா?
 • நான் மிகபெரிய பணக்காரன் ஆவேனா?
 • நான் மிகபெரிய தொழில் அதிபர் ஆவேனா?
 • நான் அரசியலில் புகழ்/பதவி பெறுவேனா?
 • நான் சினிமா/கலை துறையில் புகழ் பெறுவேனா?
 • எனக்கு இரண்டாவது மனைவி யோகம் உண்டா?
 • பரம்பரை சொத்துகள் கைக்கு வருமா?
 • தன, தானிய சேர்கை எப்பொழுது கிடைக்கும்
 • வாகன யோகம் உண்டா? எப்பொழுது?
 • எனது நோய் எப்பொழுது தீரும்?
 • மன அமைதி எப்பொழுது கிடைக்கும்?
 • எனது பெயர் நிமராலஜி படி இருக்கிறதா?
 • எனக்கு உகந்த அதிர்ஷ்ட கற்கள் யாவை?
 • எனக்கு உகந்த அதிர்ஷ்ட நிறங்கள் யாவை?
 • எனக்கு உகந்த அதிஷ்ட நாட்கள் யாவை?
 • என்னுடைய தசா புத்தி பலன்கள் எனென்ன?
 • என் குழந்தைகு என்ன பெயர் வைக்கலாம்?
 • என் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன? அவற்றின் பலன்கள் யாவை?
 • நன் செயய வேண்டிய பரிகாரங்கள் எனென்ன?
 • நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் எது?

மேலே கூறப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்களை 30 ஆண்டுகால பாரம்பரியமிக்க ASTRO-VISION மென்பொருள் ரிப்போர்ட்டுகளின் மூலம் பெறலாம்.

50 அமெரிக்க டாலர்களுக்கு (ஏறக்குறை 3000 ரூபாய்கள்) மேற்பட்ட மதிப்பிலான ரிப்போர்ட்டுகளை குறைந்த விலையில் exactpredictions.com மூலம் வாங்கிப் பயன் அடையுங்கள். கீழே கொடுகப்படுள்ள மூன்று பெக்கேஜ்களில் எதாவது ஒன்றினை தேர்வு செய்து, எங்களது லைசன்ஸ் பெற்ற ASTRO-VISION மென்பொருள்களில் இருந்து உருவாக்கப்படும் ரிப்போர்ட்டுகளைப் பெற்று பலனடையுங்கள். நீங்கள் ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில் ரிபோர்ட்டுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

[easy-pricing-table id=”362″]

By |2014-03-24T15:48:06+00:00March 24th, 2014|பாவ பலன்கள்|0 Comments

About the Author:

Leave A Comment