சூரியாதி கிரகங்கள் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கும் பலன்கள்

//சூரியாதி கிரகங்கள் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கும் பலன்கள்

சூரியாதி கிரகங்கள் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கும் பலன்கள்

சூரியன் இருக்கும் ஸ்தான பலன்

சூரியன் முதல் ஸ்தானத்தில் இருந்தால் ஜாதகர் சுருசுருபுடையவராகவும், ஆரோகியமுள்ளவராகவும், நேத்திர ரோகமுடையவராகவும், வீரியமுள்ளவராகவும் இருப்பார்.

சூரியன் இரண்டாவது இடத்தில் இருந்தால் ஆயுள் உள்ளவராக இருப்பார். ஆனால் வித்தையில் மந்தமும், அகலமான முகம் உள்ளவராகவும் முகத்தில் உள்ள உறுப்பு ஒன்றில் ரோகம் ரோகமுள்ளவராகவும் இருப்பார்.

சூரியன் மூன்றாவது இடத்தில் இருந்தால் கவலைகள் இல்லாதவராகவும், நற்புத்தி உடையவராகவும், சகோதரர்கள் உடையவராகவும், தனவானாயும் இருப்பார். இவருக்கு சிற்றுண்டி மேல் அதிக ஆசையுண்டு.

சூரியன் நான்காவது இடதில் இருந்தால் அங்கஹீனராக இருப்பார். சொந்தக்காரர்கள் பகையுள்ளவர்கள். பரம்பரை சொத்துகளை இழக்க நேரிடும். மனக்கவலை அதிகம் உள்ளவர்.

சூரியன் 5 ஆவது இடத்தில இருந்தால் உத்யோகம் செய்பவராக இருப்பார். ஈவிரக்கம் இல்லாதவராக இருப்பார். தரித்திர தசையில் கஷ்டப்பட வேண்டியவராகவும் இருப்பார்.

சூரியன் ஆறாவது இடதில் இருக்கப் பிறந்தவர் புகழும், கீர்த்தியும் அடைவார். விரோதிகளை லட்சியம் செய்ய மாட்டார். அவர்களை சுலபத்தில் ஜெயிப்பார். புத்திசாலியாய் இருப்பார். அரசர்கள் இவரை விரும்புவார்கள்.

சூரியன் ஏழாவது இடதில் இருந்தால் பெண்கள் மூலம் பொருள் அடைவார். சாஸ்திரங்களின் ஆராய்ச்சியில் ஈடுபடுவார். அயல் வீடுகளில் புசிக்க இச்சையுள்ளவர். பெண்களின் வார்த்தையை கேட்க பிரியம் உள்ளவர்.

சூரியன் எட்டாவது வீட்டில் இருக்கப் பிறந்தவர் கல்வி கேள்விகளில் பிரியமுள்ளவர். திராவியம் இல்லாதவர்.. அழகுள்ளவர். தர்ம சிந்தனை இல்லாதவர்.

சூரியன் ஒன்பதாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் நல்ல குணமுள்ளவர். ஆனால் கலகப்பிரியரென்று பெயர் எடுப்பார். தர்ம சிந்தனை உள்ளவர். வியாபாரத்தில் ஈடுபடுவார். பரம்பரை சொத்துகளில் ஜீவிப்பார். பூமிகள் உடையவர்.

சூரியன் பத்தாவது இடத்தில இருக்கப் பிறந்தவர் விதைகளில் தேர்ந்தவராக இருப்பார். யுக்தியும் சாமர்த்தியமும் இவருக்கு இருக்கும். சாமர்த்தியமாக பேசுவார். செல்வம் சேர்பவர். பந்துகளை விரோதித்து கொள்ள மாட்டார்.

சூரியன் பதினோராவது இடத்தில இருக்கப் பிறந்தவர் வெகு தனவந்தனாக இருப்பார். வாகன பிராப்தியும் உண்டு. கீர்தியுள்ளவர். பலருக்கு எஜமானராயிருப்பர். தைரிய லட்சுமி இவரிடம் குடி கொண்டிருப்பாள்.

சூரியன் பணிரெண்டாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் செல்வம்  இல்லாதவர். மனைவியின் சொற்படி நடப்பவர். செலவுகள் அதிகமாக செய்பவர். கண் வியாதி இருக்க வாய்ப்பு உண்டு.

சந்திரன் இருக்கும் ஸ்தான பலன்

சந்திரன் லக்னத்தில் இருந்தால் சந்திரனுடைய பூரண குணங்கள் ஜாதகரைச் சேரும். இவர் அழகாய் இருப்பார். மனையாளுக்கு இனியவர். ஜலதோசதில் உபாதை இருக்கும்.

சந்திரன் இரண்டாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் தனவந்தர் ஆகவும், ஸ்திரி போகம் அதிகம் உள்ளவராகவும், கீர்தியுள்ளவராகவும், புத்தி சாதூர்யம் உள்ளவராகவும் இருப்பார்.

சந்திரன் மூன்றாவது இடதில் இருந்தால் கல்வி கேள்விகளில் தேர்ச்சிப் பெற்றவர். ஆனால் சபைக் கூச்சம் இவருக்கு அதிகம் இருக்கும். சபையில் பயப்படுவார். மூல வியாதி இருக்கும். ஆனால் சௌக்கியமுடையாவர் என்று கூறலாம்.

சந்திரன் நான்காவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் விசாலமான வீடு உடையவர். பலருக்கு ஆதரவு கொடுத்து காப்பற்றும் நல்ல குணம் உள்ளவர். பரிமள வாசனை திரவியங்களை அதிகமாக உபயோகிப்பவர். பல இனிய குணங்களை கொண்டவர்.

சந்திரன் 5 ஆவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் அழகான மனைவி உடையவர். மாந்திரீகத்தில் ஈடுபாடு உள்ளவர். தற்பெருமை அதிகம் உள்ளவர். நல்ல வார்த்தைகளை இனிக்க இனிக்க பேசுபவர். எல்லோரும் விரும்ப கூடியவர். செய்தொழில் லாபம் காண்பவர்.

சந்திரன் ஆறாவது இடதில் இருந்தால் மதுபான விஷயத்தில் ஆசை உள்ளவர். மனைவியர் ஒன்றுக்கும் அதிகமாக உண்டு. காம இச்சை உள்ளவர் என்றும் சொல்லலாம். ஞாபக சக்தி உள்ளவர். தொழில் விருத்தி உள்ளவர்.

சந்திரன் ஏழாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் பிறர் மாதர் பேரில் இச்சை உடையவர். இந்த காரணத்தினால் களத்திர டூசம் தோசம் உண்டு என்றும் சொல்வார்கள்.

சந்திரன் எட்டாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் ஆயுளின் பின் பாகத்தில் வசதிகள் நிறைந்து காணப்படுவார். அற்ப ஆயுள் என்றும் சொல்லலாம். பித்த உடல் உள்ளவர். நல்ல குணங்கள் உள்ளவர்.பிறர் இவரை விரும்பும் நல்ல தன்மை உள்ளவர்.

சந்திரன் ஒன்பதாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் புத்திமான், பாக்கியவான். எந்த காரியத்தையும் நினைத்த உடனேயே முடிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளவர். சுக சரீரம் உள்ளவர். புத்திர பாக்கியம் உண்டு. அற்ப ஆயுள் இருக்க வாய்ப்பு உண்டு.

சந்திரன் பத்தாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் எந்த காரியத்தை தொடங்கிய போதும் அதனை முடித்து விட்டு மறு வேலை பார்ப்பது என்ற என்னமுள்ளவர். நல்ல குணங்கள் உள்ளவர். மனைவியை விரோதம் செய்து கொள்வார். காமக்கனல் இவரிடம் உண்டு. பெரும்பான்மையான விதவைகளை காமக்கிழந்திகளாக வைத்துக் கொள்வார்.

சந்திரன் பதினோராவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் புத்திமான். பலவித விதைகளில் தேர்ந்தவர். கீர்தியுள்ளவர். திரவியமுள்ளவர். ஆள் அடிமையுள்ளவர்.

சந்திரன் பன்னிரெண்டாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர். தரித்திரமுள்ளவர். பெருமை படக்கூடிய சரீர சம்பத்து இல்லாதவர். பரதேசம் திரிவார். ஸ்திரி சம்பந்த நோய்கள் தொற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு.

செவ்வாய் இருக்கும் ஸ்தான பலன்

செவ்வாய் லக்னத்தில் இருக்கப் பிறந்தவர் கருணை இல்லாதவராகவும், கடின சித்தராகவும், திடீரென்று கோபம் கொள்பவராகவும், திருட்டு புத்தி உடையவராகவும் இருப்பார். அதிகமாக வித்தை இல்லாதவர் என்றும் கூறலாம். சிறுவயதில் தந்தைக்கு பீடை தருபவராகவும் இருப்பார்.

இரண்டாவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் அதிக படிப்பில்லாவிட்டாலும் செல்வம் உள்ளவராக இருப்பார். சுபகாரியத்தில் பிரியமுள்ளவராக இருப்பார்.நேத்ர வியாதிகள் இவரைப் பீடிக்கும். முன்கோபி, துஷ்டர் என்றும் சொல்ல நேரிடும்.

மூன்றாவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் செல்வ விருதியுல்லவர். திடீர் திடீர் என்று கோபம் வரும். பிறரை கடிந்து பேசுவதில் பிரியமுள்ளவர். பந்துக்கள் சிநேகிதர்களுக்கு விரோதியாக இருப்பார்.

நான்காவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் களத்திர பீடை உள்ளவராக இருப்பார். தீர்காயுள் உள்ளவர். மாதுர் கண்டம் உள்ளவர். தைரியசாலி. ஸ்திரிகள் இவரை வெறுக்க நேரிடும்.

5 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் தாய்க்கு ரோகம் கொடுப்பவர். தாய் மாமனுக்கும் தோசம். புராண கதைகளில் வல்லவராய் இருப்பார். ஆனால் துஷ்டன் என்று பெயர் வாங்க நேரிடும்.

ஆறாவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் அற்ப ஆயுள் உள்ளவராய் இருப்பார். மனைவிக்கு பீடை. சிறு வயதிலேயே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நேரிடும். அற்ப ஆயுள் என்று சொல்லலாம்.

ஏழாவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் க்ஷயரோகத்தால் அவதிப்பட வேண்டியவராய் இருப்பார். களத்திர தோசமுண்டு.என்றும் சொல்ல வேண்டும். சகோதர்கள் அதிகம் உண்டு.

எட்டாம் இடத்தில் செவ்வாய் இருகப் பிறந்தவர் அரசர்களால் வெகுமதியளிகப்படும் நிலையை அடைவார். தாயாருக்கு ஆயுள் குறைவு. ஆயுதங்களால் ஆபத்துடையவர். கடின மனநிலை உள்ளவர் என்றும் சொல்லலாம்.

ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் வியாபாரியாக இருப்பார். ஆனால் பாக்கிய நாசம் உண்டு. பிறரிடம் சேவகம் செய்யும் நிலை ஏற்படும். தெய்வபக்தி இல்லாதவர் என்றும் சொல்லலாம்.

பத்தாவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் பலவித உபாயங்கள் தெரிந்தவராகவும், ஆசாரமுள்ளவராகவும் இருப்பார். இவருடைய குலத்தவர்கள் பெருமை படகூடிய நிலையில் இருப்பர். பேசுவதில் வல்லவராகவும், தைரியசாலியாகவும் இருப்பார்.

பதினோராவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் நல்ல வசனமுள்ளவராகவும், செல்வம் சேர்பதில் கருத்துடையவராகவும் இருப்பார்.

பன்னிரெண்டாவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் களத்திர பீடையுள்ளவராயிருப்பர், சகோதர பீடையுண்டு. வாத சரீரியாகவும் இருப்பார். அல்ப புத்திரர்கள் உடையவர்.

புதன் இருக்கும் ஸ்தான பலன்

புதன் லக்னத்தில் இருக்கப் பிறந்தவர் நல்ல விதமாக கல்வி கேள்விகளில் சிறந்தவராயும், சமயோசித புத்தியுடன் பேச வல்லவராயும், ஞானவானாகவும் , தன தான்ய சுகங்கள் உள்ளவராகவும், சரீர பூசனமுள்ளவராகவும் இருப்பார்.

புதன் இரண்டாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் புத்திர பாக்கியமுள்ளவர், செல்வச் சிறப்பு உள்ளவர், சகோதர, சகோதரிகள் உள்ளவர். ராஜாக்களின் சபையில் வெகுமதி வாங்கும் யோக்கியதை பெற்றிருப்பவர், எடுத்த காரியத்தில் வெற்றியடையும் நோக்கமும் மன உறதியுமுள்ளவர்.

புதன் மூன்றாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர், ஸ்திரிகள் பால் பிரியமுடையவர், அருசுவையுண்டு புசிப்பவர். மூத்த சகோதரிகளுண்டு. இனியவர்.

புதன் நான்காவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் கல்விமான். கீர்தியுள்ளவர். ராஜ சபையில் வெகுமானம் பெரும் யோக்கியதை உள்ளவர். சுகபோஜனம் செய்யும் பாக்கியம் பெற்றவர். பண்டிதர் என்று பலராலும் போற்றப்படும் பாக்கியம் பெற்றவர்.

புதன் 5 ஆவாது இடத்தில் இருக்கப் பிறந்தவர் வித்தை கலையில் சிறந்தவராய் இருப்பார்.சுக ஜீவனம் செய்து நல்ல பதார்த்தங்களுடன் போஜனம் செய்யும் ப்ரப்தியுண்டு. செல்வந்தர்கள், அரசர்கள் போர்ருதலுகுரியவர். அதே நேரத்தில் கலகப் பிரியராகவும், டாம்பீகமுள்ளவராகவும் இருப்பார்.

புதன் ஆறாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் சத்ருகளை எளிதில் வெல்வார். அற்ப வித்தையாய் இருந்தாலும் அதை வைத்துக் கொண்டே பிரகாசிப்பார். பொருள் நாசம் செய்பவராயும் இருப்பார். பித்த ராகங்கள் அடிகடி வரும்.

புதன் ஏழாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் சரீர சாந்தி உள்ளவர். பெண்கள் மூலம் திரவியம் அடைவார். வாகன யோகம் உண்டு. குதிரைகளை பராமரித்து யோகம் அடையக் கூடும்.

புதன் எட்டாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் நல்ல குணமுடையவர்தான். அனால் அற்ப புத்தியும் அடிக்கடி தலை தூக்கும். தீர்காயுளுடன் இருப்பார். திரவியங்கள் சேர்பதில் கருத்துடன் இருப்பார்.

புதன் ஒன்பதாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் நல்ல வித்யா பாக்கியம் உள்ளவர். ஆசாரமுள்ளவர். செல்வம் உள்ளவர். பலரும் சிலாகித்து விரும்பும் நல்ல நிலையை அடைவார்.

புதன் பத்தாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் நல்ல ஞானம் உள்ளவர். தர்ம சிந்தை உள்ளவர். கீர்த்தி உள்ளவர். ஆசார சீலர். கேந்திர ரோகம் பாதிக்கும். திரவியம் சம்பாதிப்பதில் கருத்தூன்றி இருப்பார்.

புதன் பதினொன்றாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் யோகவான். பாக்கியங்கள் பெற்று வாழ்வார், வீடு வாசல் பாக்கியங்களும் உண்டு. அதிகாரம் உள்ளவர். ஆனால் சற்று மூர்க்க குணமும் காணப்படும். மங்களகரமும் இவரை சூழ்ந்திருக்கும்.

புதன் பனிரெண்டாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் காமாந்தகாரர் ஏன பெயர் பெற வாய்ப்பு உண்டு. பலருக்கு விரோதியாவர். அளவுக்கு மிஞ்சி அனாவசிய செலவுகள் செய்வார். புத்திர பாக்கியம் குறைந்திருக்கும்.

குரு இருக்கும் ஸ்தான பலன்

குரு லக்னத்தில் இருக்கப் பிறந்தவருக்கு குருவின் பூரண கிருபை உண்டு. இவருக்கு தெரியாத சாஸ்திரமே இல்லை என்று சொல்ல வேண்டும். பலரும் போற்றும் பாண்டித்தியம் பெற்றிருப்பார், தீர்காயுள் உண்டு. தர்க்க சாஸ்திரம் அறிந்தவர். வாக்கு வன்மை உள்ளவர். அறிவாளி சுகஜீவனம் உண்டு.

குரு இரண்டாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் மிகவும் நிதானமாக பேசுபவர். நீதிமான். இவருக்கு பால்யத்திலேயே விவகமாகிவிடும். சற்புத்திரர்பாக்கியம் உண்டு. அழகர். மிகுந்த தனங்கள் சேர்பவர்.

குரு மூன்றாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் தன் சரீரத்தை ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்பவர். தாக்ஷண்யத்திற்காக பலத்தையும் செய்யக் கூடியவர். பந்து ஜனகளுக்கு பிரியமானவர். வித்தையில் அபிவிருத்தி உள்ளவர்.சகோதர்களுக்கு உதவிகள் செய்பவர்.

நான்காவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் தர்ம குணம் உள்ளவர் சுக ஜீவனம் செய்பவர். வாகன யோகம் உடையவர். பந்துகளுக்கு இனியவர். சுகசரீரம் உள்ளவர். பசுக்கள் பாக்கியம் உண்டு.

குரு 5 ஆம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் புத்திமான். புதிர்கள் குறைவு. சேனைதலைவர் ஆகும் வாய்ப்பு உண்டு. அதிகமாக செலவு செய்பவர். ஆனால் தனம் சேர்பதில் கருத்துள்ளவராகவும் இருப்பார்.

குரு ஆறாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் ஞானஹீனராக இருப்பார். பவுத்திர ரோகங்கள் பீடிக்கும். சத்ருகளை ஜெயிப்பார். சாஸ்திர ஞான விரிதியுள்ளவர். செல்வம் அதிகமாக சேராது.

குரு ஏழாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் சிறுவயதில் விவாகம் செய்து கொள்ள வேண்டியதாக ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவார். நல்ல மனைவியை அடைவார். அடிக்கடி விசனங்களால் பாதிக்கப் படுவார்.

குரு எட்டாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் மூல வியாதிக்கு ஆளாவார். புத்திமான். ஆசாரம் உள்ள்ளவர். வெகுஜன பிரியர்.

குரு ஒன்பதாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் தான தர்மங்களை செய்பவர். தீர்க்காயுள் உண்டு. விரதங்களை அனுஸ்டிப்பவர். தனவான்.ஆசாரஅனுச்டானங்களில் ஈடுபாடு உண்டு.

குரு பத்தாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் திறன் பெற்றிருப்பர். கல்வியில் தேர்ச்சியுண்டு. வேசிப்பிரியர். தனவான். அஸ்வ யோகமும் உண்டு.

குரு பதினோராவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் ஞான சிகாமணி எனும் பெயர் பெறுவார். தனவான். சங்கீதத்தில் ஈடுபாடு உண்டு. புத்திரபேறு உள்ளவர். ராஜ சன்மானம் பெறுவார்.

குரு பணிரெண்டாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் மனைவி வார்த்தையை கேட்பவர். தயவு தாட்சண்யம் இல்லாதவர். வீட்டை விட்டோ ஊரை விட்டோ நெடுங்காலம் வாசம் செய்பவர்.. அற்ப புத்தி உள்ளவர்.

சுக்ரன் இருக்கும் ஸ்தான பலன்

சுக்ரன் லக்னத்தில் இருக்கப் பிறந்தவர் மனைவியின் மீது அதிகம் பிரியம் உள்ளவர். கணக்கு வகைகளில் தேர்ச்சி உள்ளவர்.கருமி. சுகசரீரம் உள்ளவர்.அழகுள்ளவர்.

சுக்ரன் இரண்டாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் சுக சரீரமுள்ளவர். உத்தமமான மனைவியை உடையவர்.  பெண்களின் வலையில் எளிதில் அகப்பட்டு கொள்வார்.முக வசீகரம் உள்ளவர்.ஸ்திரி லோலர். போஜனப்பிரியர்.

சுக்ரன் மூன்றாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் அதிகமாக கோபம் உள்ளவர். சகோதர சம்பத்து உள்ளவர். கலகமுடையவர். லச்சையுள்ளவர் என்று கூறலாம்.

சுக்ரன் நான்காம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் வித்தை உள்ளவர். பெண்களின் விரோதத்தை பெறுவார். பந்து ஜனப்பிரியர். பண்டிதனாவர். வாகனமுடையவர். போஜனபிரியர்.

சுகரன் 5 ஆம் இடத்தில் இருக்கப் பிறந்தவரின் தாயாருக்கு பீடை. வித்வான். தனவான், சேனைக்கு அதிபதியென வாழ்கையில் திகழ்வார்.

சுக்ரன் ஆறாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் சத்ருகளை எளிதில் ஜெயிப்பார். புத்திமான். ஸ்திரி சம்போகத்தில் அதிக நாட்டம் உள்ளவர். மனைவி குறையுள்ளவராக இருக்க வாய்ப்பு உண்டு.

சுக்ரன் ஏழாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் கீர்த்தியுள்ளவர். விவேகமுள்ளவர். துஷ்டன் என்று பெயர் வாங்க வாய்ப்பு உண்டு. மந்த புத்தியுள்ளவர். பரஸ்திரிகளின் மேல் நாட்டம் கொள்ள வாய்ப்பு உண்டு.

சுக்ரன் எட்டாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் ஸ்திரி சம்போகத்தில் விருப்பமுள்ளவர். ஆயுள் பரியந்தம் செல்லுவான். துர்மார்கன் என்றும் பெயர் பெறுவார். குனவானாக இருப்பவர் நீண்ட ஆயள் உள்ளவர்.

சுக்ரன் ஒன்பதாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் பாக்கியவான். தர்ம சிந்தனை உள்ளவர். சுப காரியங்களை செய்வதில் நாட்டம் உள்ளவர். குரு விசுவாசம் உள்ளவர். ஞானவான். கருணை உள்ளவர். பலர் விரும்பும் நல்ல குணங்களுடன் வாழ்வார்.

சுக்ரன் பத்தாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் கீர்திமான். கல்வி கேள்விகளில் சிறந்தவர். ஸ்திரி ஜனமுள்ளவர். தனவான். வாகன யோகம் உள்ளவர்.

சுக்ரன் பதினொன்றாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் கல்வி அறிவு உள்ளவர். தன்வான். தோழில் அபிவிருத்தி உள்ளவர். வாகனமுள்ளவர். எதிலும் ஆதாயம் சம்பாதிக்கும் நுட்ப புத்தி உள்ளவர்.

சுக்ரன் பணிரெண்டாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் எடுத்த காரியத்தை ஜெயத்துடன் முடிக்கப் பாடுபடுவார்.பந்து ஜன விரோதி. செல்வச் செழிப்பு உள்ளவர்.

சனி இருக்கும் ஸ்தான பலன்

சனி லக்னத்தில் இருக்கப் பிறந்தவர் பல கலைகளையும் கற்றுணர்வார். ரூபவான். துர்புத்தியுள்ளவர். ஞானமுள்ளவர். உற்சாகமாக காலங்கழிப்பவர்.

சனி இரண்டாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் செல்வம் உடையவர். ஆயுள் விருத்தியில்லாதவார். இரண்டு விவாகங்கள் செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளவர்.எதாவது விவகாரத்தால் பாதிக்கப்படுவார்.

சனி மூன்றாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் தாசிகள் லோலர். கெட்ட பெயர் சம்பாதித்து கொள்பவர். சேவக விருதியுள்ளவர். தனதான்ய விருதியுள்ளவர். அனால் சகோதர விருத்தி இல்லாதவர். சுகவான் என்றும் கூறலாம்.

சனி நான்காம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் சகோதர பாக்கியம் உள்ளவர். பெரியோர் சேர்கை உள்ளவர். சரீர புஷ்டியுள்ளவர். வாகன ப்ரப்தியுள்ளவர். மித்ர பேதம் செய்வதில் பின்வாங்க மாட்டார்.

சனி 5 ஆம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் தர்ம சிந்தனை உள்ளவர். விரோதிகளை எளிதில் ஜெயிப்பவர்.புத்திர பாக்கியம் அதிகம் இல்லாதவர். பெரியோர்களுடைய விரோதத்தை சம்பாதிப்பவர்.

சனி ஆறாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் புத்திமான். பரிசுத்தர். சத்ருகளை எளிதில் வெல்பவர். செல்வங்கள் சேர்பவர். அற்பமான வியாதிகள் உள்ளவர்.

சனி ஏழாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் தேக சஞ்சாரம் செய்பவர். வேசிகள் சகவாசம் உள்ளவர். இரண்டு மனைவி ப்ராப்தம் உண்டு. ஸ்த்ரீகளின் விரோதத்தையும் சம்பாதித்துக் கொள்பவர்.

சனி எட்டாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் கண் சம்பந்தமான வியாதி உள்ளவர். கீழ்சாதி பெண்களின் இன்ப நுகழ்ச்சியுள்ளவர். தீர்காயுள் உண்டு. ஆனால் உத்தியோகத்தில் நிலைத்து இருக்காத நிலை உண்டாகும். தரித்திரத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டு இருகின்ற நிலை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

சனி ஒன்பதாம் இடத்தில் இருக்கப் பிறந்தவரின் தாயாருக்கு பீடை உண்டாக வாய்புண்டு. மனைவி பாக்கியம் உள்ளவர். திருப்பணிகள் செய்வதில் ஆர்வம் உள்ளவர்.

சனி பத்தாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர்குரு பக்தியில் சிறந்தவர். கிராம அதிகாரம் வகிப்பவர். பிறந்த ஊரை விட்டு தூர தேசத்தில் வேலை செய்பவர். புத்திமான் என்று பலரால் போற்றப்படுபவர்.

சனி பதினோராவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் அல்ப வித்தை உள்ளவரான போதிலும் ராஜ் பூஜிதா என்று சொல்லலாம். புத்தி கூர்மையுள்ளவர். தானிய விருத்தியுள்ளவர். பூமிகளை சேர்த்து சேர்த்து லாபம் அடைபவர்.போக பாக்கியங்களை அனுபவிப்பவர்/

சனி பணிரெண்டாம் இடத்தில் இருக்கப் பிறந்தவர் எடுத்த காரியத்தை முடிக்கும் ஆர்வம் உள்ளவர். விசப்பார்வை உள்ளவர். லோபி என்று பலர் தூற்றும் குணங்கள் உள்ளவர். மனைவி தோஷம் உள்ளவர்.

ராகு கேது இருக்கும் ஸ்தான பலன்

லக்னத்தில் ராகு, கேது இருவரில் யார் இருந்தாலும் ஜாதகர் புத்திர பாக்கியம் உள்ளவர். ஆயுள் விருத்தி இல்லாதவர். செல்வான். ஆனால் ஏதேனும் வியாதியால்  கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பார்.

இரண்டாவது இடதில் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவர் எப்போதும் ஏதோ ஒன்றைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார். அற்ப வித்தையுள்ளவர். நடுத்தர வயதுக்குமேல் பக்கியமுள்ளவர். தயை, கருணை என்பது இல்லாத கடின சித்தம் உள்ளவர். சோம்பல் என்பது உடன் பிறந்தது போல் உறவாகும். இரு விவாக ப்ரப்தியுள்ளவர்.

மூன்றாவது இடத்தில் ரகுவோ, கேதுவே இருக்கப் பிறந்தவர் புகழ் மிக்கவர். திடீர் கோபத்திற்கு ஆளாவர். தைரியசாலி, அகால போஜனமுள்ளவர். லட்சமியின் அருள் பெரும் பாக்கியமும் உண்டு என்று சொல்ல வேண்டும்.

நான்காவது இடத்தில் ராகுவோ, கேதுவோ இருக்கப் பிறந்தவருக்கு இரண்டு மனைவியர் யோகம் உண்டு. சேவக விருதியுள்ளவர். பொன் பூஷன பாக்கியம் உள்ளவர்.

5 ஆவது இடத்தில் ராகுவோ கேதுவோ இருகப் பிறந்தவர். தயவு தாட்சண்யம் உள்ளவர். முன் சகோதரிகள் உள்ளவர். அற்ப புத்தியுள்ளவர். துன்மார்கர் என்று பெயர் எடுக்கும் சூழ்நிலையும் ஏற்படும்.

ஆறாவது இடத்தில ரகுவோ கேதுவோ இருக்கப் பிறந்தவர் ஸ்த்ரீ பாக்கியம் அதிகம் உள்ளவர்.ஸ்திரீகள் மகிழும் வண்ணம் நடந்து கொள்பவர்.

ஏழாவது இடத்தில் ரகுவோ கேதுவோ இருக்கப் பிறந்தவர் நீர் ரோகத்தால் கஷ்டப்படலாம். வித்துவான். இரண்டு மனைவியர் உண்டு.

எட்டாவது முதல் பனிரெண்டாவது இடம் வரை ரகுவோ கேதுவோ இருப்பதை மற்ற கிரகங்களின் பார்வை, சேர்கை முதலானவற்றைக் கொண்டு பலன் சொல்லலாம்.


பொதுவாக ஜோதிடத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுது பின்வரும் கேள்விகள் மனதில் எழும்:

 • எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்?
 • எனக்கு காதல் திருமனம் நடக்குமா அல்லது பெற்றோர் பார்த்து திருமனம் நடக்குமா?
 • எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்?
 • எனக்கு வீடு கட்ட உகந்த காலம் எது?
 • எனக்கு புத்திர பாக்கியம் உண்டா? எப்பொழுது கிடைக்கும்
 • என் கடன் பிரச்சனைகள் எப்பொழுது தீரும்?
 • எந்த தொழில் அல்லது வியாபாரம் எனக்கு உகந்தது?
 • நன் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க முடியுமா?
 • நான் மிகபெரிய பணக்காரன் ஆவேனா?
 • நான் மிகபெரிய தொழில் அதிபர் ஆவேனா?
 • நான் அரசியலில் புகழ்/பதவி பெறுவேனா?
 • நான் சினிமா/கலை துறையில் புகழ் பெறுவேனா?
 • எனக்கு இரண்டாவது மனைவி யோகம் உண்டா?
 • பரம்பரை சொத்துகள் கைக்கு வருமா?
 • தன, தானிய சேர்கை எப்பொழுது கிடைக்கும்
 • வாகன யோகம் உண்டா? எப்பொழுது?
 • எனது நோய் எப்பொழுது தீரும்?
 • மன அமைதி எப்பொழுது கிடைக்கும்?
 • எனது பெயர் நிமராலஜி படி இருக்கிறதா?
 • எனக்கு உகந்த அதிர்ஷ்ட கற்கள் யாவை?
 • எனக்கு உகந்த அதிர்ஷ்ட நிறங்கள் யாவை?
 • எனக்கு உகந்த அதிஷ்ட நாட்கள் யாவை?
 • என்னுடைய தசா புத்தி பலன்கள் எனென்ன?
 • என் குழந்தைகு என்ன பெயர் வைக்கலாம்?
 • என் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன? அவற்றின் பலன்கள் யாவை?
 • நன் செயய வேண்டிய பரிகாரங்கள் எனென்ன?
 • நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் எது?

மேலே கூறப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்களை 30 ஆண்டுகால பாரம்பரியமிக்க ASTRO-VISION மென்பொருள் ரிப்போர்ட்டுகளின் மூலம் பெறலாம்.

50 அமெரிக்க டாலர்களுக்கு (ஏறக்குறை 3000 ரூபாய்கள்) மேற்பட்ட மதிப்பிலான ரிப்போர்ட்டுகளை குறைந்த விலையில் exactpredictions.com மூலம் வாங்கிப் பயன் அடையுங்கள். கீழே கொடுகப்படுள்ள மூன்று பெக்கேஜ்களில் எதாவது ஒன்றினை தேர்வு செய்து, எங்களது லைசன்ஸ் பெற்ற ASTRO-VISION மென்பொருள்களில் இருந்து உருவாக்கப்படும் ரிப்போர்ட்டுகளைப் பெற்று பலனடையுங்கள். நீங்கள் ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில் ரிபோர்ட்டுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

[easy-pricing-table id=”362″]

About the Author:

Leave A Comment