சொர்க்கம் / நரகம் மற்றும் மறுபிறப்பு

//சொர்க்கம் / நரகம் மற்றும் மறுபிறப்பு

சொர்க்கம் / நரகம் மற்றும் மறுபிறப்பு

 

 • ஒரு மனிதன் செய்யும் பாவங்களும், அவன் படும் கடன்களும் ஒரே அளவையால் தான் அளக்கப்படுகின்றது. 
 • கடன் கொடுத்தவர் அதனை மனதார ரத்து செய்தால் அந்த கடன் சுமையிலிருந்து நாம் விடுபடுகின்றோம். 
 • அதேபோல் நம்மிடம் கடன் வாங்கியவர்களிடம் நாம் அவர்களது கடனை ரத்து செய்யும் பொழுது நாம் மனதிலும், ஆன்மாவிலும் பதிந்திருக்கும் கடன் சுவடு அழிந்து போகின்றது. 
 • நம்மால் வாங்கிய கடனை கொடுக்க முடியவிலை என்றால் அந்த கடன் அடைபடும் வரை அதன் பாரம் நம்மோடு தான் இருக்கும். எப்படி இருந்தாலும் அந்த கடனை அடைபதற்கு உண்டான வேலையை நாம் செய்தே ஆக வேண்டும்.
 • கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்வது ஒருவருக்கு எந்த நல்ல பலனையும் கொடுக்காது. மாறாக அவர் இந்தப் பிறவியில் கிடைத்த நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டு, அடுத்த பிறவிக்கு அந்த சுமையை எடுத்து செல்கின்றார். 
 • நாம் செய்த பாவங்களுக்கு இந்த பிறவியில் மன்னிப்பு பெறாவிடில் அல்லது தண்டனையை பெறாவிடில் அல்லது பரிகாரம் செய்யாவிடில் அந்த சுமையை அடுத்த பிறவிக்கு நாம் நிச்சயம் எடுத்து செல்வோம்.
 • நாம் ஒருவருக்கு எதிராக பாவம் செய்யும் செய்யும் போழுது, நம்மால் பாதிக்கப்பட்டவர் நம்மை மனதார முழுவதுமாக மன்னிக்கும் பொழுது அந்த பாவத்தின் சுமையிலிருந்து நாம் விடு படுகின்றோம்.
 • நாம் செய்த பாவம் ஒன்றுக்கும் மேற்பட்டோரை பாதிக்கும் பொழுது அத்தனை பெரும் நம்மை மன்னிக்காவிடில் அதற்க்கேற்ற தண்டனையை அனுவவிக்க வேண்டி வரும். மேலும் பரிகாரங்களையும் செய்ய வேண்டி இருக்கும்.
 • மேலும் நாம் செய்த தவறை நாம் உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும் பொழுது அந்த பாவ சுவடு நம் மனதை விட்டும், ஆன்மாவை விட்டும் அழிந்து போகின்றது.
 • பிரதி பலன் பாராது நாம் செய்யும் உதவிகள் அனைத்தும் நமது புண்ணிய கணக்கில் சேர்க்கப்படும்.
 • இந்த புண்ணிய கணக்கில் உள்ள மதிப்பு, பாவ கணக்கில் உள்ள மதிப்பை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அடுத்த ஜென்மத்தில் நமக்கு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய கட்டம் சிறப்பாக அமையும்.
 • வாழ்க்கை ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டை விளையாட நாம் சென்ற பிறவிகளில் செய்த நன்மை, தீமைகளை சுமந்து கொண்டு பிறக்கின்றோம். இந்த பிறவிக்கென்று தனியாக தடைகள், வாய்புகள், இன்பங்கள், துன்பங்கள் என்றும் உண்டு. எடுத்துக்காட்டாக டெஸ்ட் கிரிகெட் விளையாட்டை எடுத்துக்கொள்வோம். முதல் இன்னிங்சில் ரன்கள் அதிகம் எடுத்திருந்தால், இரண்டாவது இன்னிங்சை கஷ்டப்படாமல் விளையாடலாம். முதல் இன்னிங்க்சில் ரன்கள் குறைவாக எடுத்திருந்தால் இரண்டாவது இன்னிங்சை மிக ஜாக்கிரதையாக விளையாட வேண்டும்.
 • ஆகா மொத்தம் பாவ புண்ணிய கணக்கு சமன் ஆக வேண்டும். மேலும் பாவம், புன்னினியம் தாண்டி நமது சதாரண ஆத்துமா ஆனது இறை நிலையை அடையும் வரை பிறப்புகள் தொடரும்.
 • நம்மில் பலர் சில சமயங்களில் நமது ஆத்துமா இறை நிலையில் இருப்பதாக உணர்வோம். பரமானந்தத்தில் திளைப்போம். உண்மையில் அப்பொழுது தாம் நாம் இறை நிலையை அடைவதற்கான முதல் படியில் ஏறுகின்றோம். அனால் இந்த உலகம் சார்ந்த விசயங்களில் ஈர்க்கப்பட்டு மீண்டும் ஏறிய படிக்கட்டுகளில் இருந்து மீண்டும் இறங்கி விடுகின்றோம்.
By |2018-12-18T17:10:17+00:00July 10th, 2014|ஆன்மீகம்|0 Comments

About the Author:

Leave A Comment