சுழற்சி விதி எனும் சக்கர வியூகம்

//சுழற்சி விதி எனும் சக்கர வியூகம்

சுழற்சி விதி எனும் சக்கர வியூகம்

 

அகன்று பரந்து விரிந்து இருக்கின்ற இந்த அண்ட வெளியில் நமது சூரிய குடும்பம் சுழன்று கொண்டு இருக்கின்றது என்பதை நாம் அறிவோம்.

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதையும், அதே போல் அணைத்து கிரகங்களும் தங்களை தாமே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதையும் நாம் அறிவோம். அதேபோல் சூரியன் தன்னை சுற்றும் கிரகங்களை தனது ஈர்ப்பு விசையில் வைத்துக்கொண்டு தனது அணைத்து கோள்களுடன் இந்த அண்ட வெளியில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் அறிவோம்.

என்ன இவன் ஆறாம் வகுப்பு பாடத்தை எடுத்துக்கொண்டிருக்கின்றான் என்று என்ன வேண்டாம். இந்த பிரபஞ்சம் சுழன்று கொண்டிருக்கின்ற இந்த சுழற்சியின் அடிப்படையில் தான் மனித வாழ்க்கை முழுவதும் அமைந்திருக்கின்றது. சுருங்கக் கூறின் மனித வாழ்கையின் ஒவ்வொரு நொடியும் சுழற்சி விதியின் படி தான் நடக்கின்றது. அதனைப் பற்றி சிந்திக்கவே இந்த கட்டுரையை எழுதுகின்றேன்.

சுழற்சி விதியினை நான் எதனுடன் ஒப்பிடுவேன். மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு, கிருஷ்ணர் சொல்லிக் கொடுக்கும் சக்கர வியூகத்துடன் ஒப்பிடுவேன்.

சக்கரவியுகம் என்பது போர்களத்தில் ஒருவனைத்தக்க அல்லது ஒரு குழுவைத்தாக்க போர் வீரர்கள் வட்ட வடிவில் சூழ்ந்து கொண்டு தாக்கும் முறையாகும். பொதுவாக சக்கர வியூகத்தை உடைத்துக்கொண்டு எவ்வாறு உள்ளே செல்வது என்றும் அதேபோல் எவ்வாறு வெளியே வருவது என்றும் எல்லோருக்கும் தெரியாது. கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அந்த சூட்சமத்தை சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது தாயின் கருவில் இருந்த அபிமன்யு அதனை கேட்டுக்கொண்டிருப்பான். இதனை அறிந்த கிருஷ்ணர் சக்கர வியூகத்தை உடைத்துக்கொண்டு எவ்வாறு உள்ளே செல்வது என்று சொல்லியபிறகு, வெளிய வரும் சூட்சமத்தை அபிமன்யுவின் காதுகளுக்கு கேட்காதபடிக்கு பார்த்துக் கொள்வார். ஏனெனில் பாரத போரில் அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே சென்று, வெளிய வரமுடியாமல் நிராயுதபாணியாக சாக வேண்டும் என்ற விதியினை கிருஷ்ணர் அறிந்திருந்தார்.

சரி மகாபாரத கதை இருக்கட்டும். நமது வாழ்வில் நாம் சந்திக்கும் சக்கர வியூகங்களை / சுழற்சிகளை எவ்வாறு உடைபது என்பதை அறிவோமா!

  • காலை எழுந்ததும் காபி குடித்து, பேப்பர் படித்து, டிபன் சாப்பிட்டு, வேலைக்கு சென்று, வேலைப்பார்த்து, மதியம் சாப்பிட்டு, சாயந்திரம் வீடு வந்து, டிவி பார்த்து, இரவு உணவு உண்டு, தூங்கி எழுந்து மீண்டும் காலை எழுந்ததும்…..இவ்வாறு நாம் வாழ்கின்ற அன்றாட வாழ்கை முறை ஒரு சுழற்சி.
  • சிறியதாய் வாங்கிய கடன், வளர்ந்து, வளர்ந்து, வளர்ந்து, வட்டி குட்டி போட்டு, குட்டி வட்டி போட்டு என மிகப்பெரிய கடன் சூழற்சியில் சிக்கித் தவிக்கின்ரீர்களா?
  • காதல் நோயில் விழுந்து அல்லது கள்ளக் காதலில் விழுந்து, அந்தக் காதல் கண்ணை மறைத்து, வாழ்கையே காதலி/காதலன்  கிடைத்தால் தான் உண்டு எனும் மாய சுழற்சியில் சிக்கித் தவிக்கிண்றீர்களா?
  • எவ்வளவு கிடைத்தாலும் பத்தாமல், இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற பேராசை சுழற்சில் இருக்கின்றீர்களா?
  • நோய், நோய், நோய் என்று எப்பொழுதும் சுகமின்றித் தவிக்கும் நோய் சுழற்சியில் இருக்கின்றீர்களா?
  • எனக்கென்று ஒரு வீடு வேண்டும் என்று கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கி, வீட்டுக்கடனை மாதாமாதம் கட்டவும் முடியாமல், விடவும் முடியாமல், பிடிக்காத வேலையையும் விடமுடியாத சுழற்சியில் தவிக்கின்ரீர்களா?
  • வியாபாரம் செழித்து பணம் மேலும் மேலும் கொட்டிக் கொண்டே இருக்கும் சுழற்சியில் இருக்கின்றீர்களா?

ஒரு சுழற்சியை எவ்வாறு உருவாக்குவது, உருவான சுழற்சியை எவ்வாறு வலுவாக்குவது அல்லது எவ்வாறு பலவீனமாக்குவது, சுழற்சியை உடைத்து எவ்வாறு உள்ளே நுழைவது, சுழற்சியை விட்டு எவ்வாறு வெளியே வருவது இவைகள் ஒரு மனிதனுக்கு தினமும் தேவைப்படுவது ஆகும்.

கடலில் புயல் உருவாவதை கவனியுங்கள். முதலில் பருவக்கற்று மெதுவாக கடலின் மீது வீசுகின்றது. வீசுகின்ற கற்று மெதுவாக சுழல ஆரம்பிகின்றது. ஒன்றிரண்டு நாட்களில் அந்த சுழற்சியின் வேகம் அதிகரித்து அதிகரித்து புயலாக மாறுகின்றது. அந்த புயல் கரையை நோக்கி நகர ஆரம்பிக்கின்றது. கரையை கடக்கும் பொழுது பலவித சேதங்களை ஏற்படுத்தி விட்டு வலுவிழந்து வெறுமை ஆகின்றது.

புயல்கள் உருவாகி மறைவது போலவே நம் வாழ்கையில் நடக்கும் அணைத்து விஷயங்களும் சுழற்சிகளாக உருப்பெற்று, வலுவடைந்து, சிலகாலம் நீடித்து பின்பு வலுவிழந்து போகின்றன.

நாம் இங்கு ஒன்றை கவனித்து ஆக வேண்டும். சுழற்சிக்கும் சக்திக்கும் நேரடி தொடர்பு உண்டு. நமக்குள் இருக்கின்ற சக்தியினை பொறுத்தே நம்மால் ஒரு சுழற்சியினை ஆரம்பிக்கவோ, உடைக்கவோ, வலுவாக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இயலும்.

ஒரு சைக்கிளின் பெடலை ஓட்ட ஆரம்பிக்கும் பொழுது மிகுந்த அழுத்தம் கொடுத்து மிதிக்க வேண்டியிருக்கும். சக்கரம் நன்கு சுழல ஆரம்பித்த பிறகு குறைவான சக்தியே நமக்கு பெடலை சுற்றுவதற்கு தேவைப்படுகின்றது. மேலும் காற்று நாம் போகும் திசையில் வீசுமாயின் சைக்கிள் தானாகவே இன்னும் வேகம் எடுக்கின்றது. இன்னும் மேம்பாலத்தின் இறக்கத்தில் பயணிக்கும் பொழுது நாம் சொல்லவே வேண்டியதில்லை பெடலில் இருந்தே காலை எடுத்து விடலாம். இன்னும் ஒருபடி மேலே சென்று மோட்டார் ஒன்றை சைக்கிளில் பொருத்திவிட்டால் நம் கால்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடும். பெட்ரோலும் மோட்டாரும் சைக்கிள் ஓடுவதற்கு தேவையான சக்தியை தந்துவிடும்.

இந்த எடுத்துக்காட்டை நாம் பயணிக்கும் அணைத்து சுழற்சிகளுக்கும் ஒப்பிட்டுபார்த்துக் கொள்ளலாம். இந்த எடுத்துக்காட்டில் காற்று, மேம்பால இறக்கம், மோட்டார் மற்றும் பெட்ரோல் முதலானவை புற காரணிகள். பெடலை நாம் முதலில் மிதிக்க பயன்படுத்திய நமது கால்களின் சக்தியே முழு முதல் காரணி ஆகும்.

நாம் ஒரு தொழில் ஆரம்பிகின்றோம் என்று வைத்துக் கொண்டால், அந்த தொழில் சார்ந்த நமது அறிவும், அனுபவமும், முதலீடும் மற்றும் நமது முதல் காரணிகள். தொழில் வளர வளர பங்குதார்கள் இணைவது, வாடிக்கையாளர்கள் பெருகுவது, தொழிலார்கள் பெருகுவது, லாபம் பெருகுவது முதலான அனைத்தும் அந்த தொழிலின் சுழற்சியினால் ஏற்படும் சக்தியின் பலத்தால் விளைவதாகும்.

2௦௦ வருடங்களுக்கு முன்பு மோட்டார் கண்டுபிடிப்பதற்கு முன்பு இருந்த உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். மோட்டார் கண்டுபிடித்தபின் ஏற்பட்ட வளர்ச்சியை எண்ணிப்பாருங்கள். மோட்டார் என்பது சுழற்சியை ஏற்படுத்தி சக்தியை நமக்கு வழங்கும் ஒரு கருவி என்று நமக்கு தெரியும். இன்று நம் வாழ்வில் தான் எத்தனை மோட்டர்கள் ஒவ்வொரு நொடியும் நமக்கு சேவைகள் ஆற்றிக்கொண்டிருக்கின்றன.

மின்விசிறி, தண்ணிர் மோட்டர், ஏ/சி, கம்ப்யூட்டர், கடிகாரம், பைக், கார், பஸ், விமானம், கப்பல், ரயில், கிரைன்டர், மிக்சி, லிப்ட் என ஒவ்வொரு தருணமும் சுழற்சிகளின் உள்ளே தான் வாழ்ந்து கொண்டிருகின்றோம்.

அவ்வளவு ஏன் நமது இருதயமும், ரத்த ஓட்டமும், சுவாசமுமே ஒரு சுழற்சிதானே. இந்த சுழற்சிகள் இருகும் வரை தானே நாம் மனிதன். இல்லை என்றால் பிணம்.

ஆகா சுழற்சிகளை ஆழமாக ஆராய்வோம். சக்திகளை ஆக்க பூர்வமாக பயன் படுத்துவோம். உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகின்றேன்.

அன்புடன்

ஆரோக்கிய பாக்கிய நாதன் L

By |2018-12-18T17:06:02+00:00August 3rd, 2014|ஆன்மீகம்|0 Comments

About the Author:

Leave A Comment