மூன்று, ஆறு, ஒன்பது

மூன்று, ஆறு, ஒன்பது

மூன்றும், ஆறும் முக்கியம்
அதை உணர்தலே பூர்வ புண்ணியம்

மூன்று என்பதுன் முயற்சி
ஆறு என்பதுன் பயிற்சி
இவை இரண்டின் கூட்டலே உன்ஜென்மங்களில் நடக்கும் நிகழ்ச்சி

ஊக்கமது கைவிடேல் அதுவே மூன்று
கடமையை செய் பலனை எதிர்பாராதே இதுவே ஆறு
உன் பாவம் +/-* புண்ணியம் அதுவே உன் பாக்கியம் அஃதுவே ஒன்பது

மூன்றுக்கும் ஆறுக்கும் இடைவெளி நான்கு
ஆறுக்கும் ஒன்பதுக்கு இடைவெளி நான்கு

இந்த நான்கே நீ பிறக்கும் யோனி
இந்த நான்கே நீ கற்கும் கல்வி
இந்த நான்கே நீ வகிக்கும் பதவி
இந்த நான்கே நீ வசிக்கும் இல்லம்
இந்த நான்கே நீ செல்லும் வாகனம்

ஒன்பதுக்கு மூன்றுக்கும் இடைவெளி ஏழு

இந்த ஏழே உன் வாழ்க்கைத்துணை
இந்த ஏழே உன் நண்பன்
இந்த ஏழே உன் வாடிக்கையாளன்
இந்த ஏழே உன் சுற்றம்

இன்னும் சொல்வேன் ஏராளம்
இதை முதல் உணர் அதுவே தாராளம்

——–

please read the articles below

https://www.quora.com/Why-did-Tesla-say-that-3-6-and-9-was-the-key-to-the-universe

About the Author:

Leave A Comment