மரணத்தை தள்ளி போட முடியுமா?

//மரணத்தை தள்ளி போட முடியுமா?

மரணத்தை தள்ளி போட முடியுமா?

ஆம். முடியும். ஆனால் அது இறைவனின் அனுமதியோடு நடக்க கூடிய ஒன்று.

சரி நேராக விஷயத்துக்கு வருவோம்.

ஜோதிடத்தில் அஷ்டவர்க்க கணித முறை என்று உண்டு. அதன்படி ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ஜாதகத்திலும் உள்ள ஒவ்வொரு ராசி கட்டத்திலும் 0 முதல் 8 மதிபெண்ககளை வழங்கும். 4 மதிப்பெண்கள் இருந்தால் அந்த கிரகம் அந்த வீட்டில் சராசரியாக நன்மையும், தீமையம் கலந்து சராசரியாக வேலை செய்யும். 8 மதிப்பெண்கள் இருந்தால் மிக நனறாக வேலை செய்யும். 0 மதிப்பெண்கள் இருந்தால் கஷ்டம் தான் என்று பல ஜோதிட சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த 0 மதிப்பெண்கள் எவ்வாறு பலன்களை அளிக்கின்றனன என்று வெகு நாட்களாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். ஏனெனில் எடுத்துக்காட்டிற்கு சனி ஒரு கட்டத்தில் 0 மதிப்பெண்கள் வழங்கி இருக்கின்றார் என்று வைத்து கொள்வோம், கோச்சாரத்தில் சனி அந்த இடத்திற்கு வரும்போது ஜாதகர் இறந்து விடுவாரோ என்று அல்லது அந்த கட்டத்திற்கு உரிய கரகாம்சம் முற்றிலும் நாசமாகி விடுமோ என்று பலருக்கும் பயம் உண்டு.

ஆனால் எனது ஆராய்ச்சியில், நடைமுறையில் சில ஜாதகங்களில் நடந்த விஷயங்களை கண்டு வியந்து போனேன்.

அவை என்ன….

ஜாதகர் மரணிப்பதற்கு பதிலாக திருமணம் நடக்கின்றது.

ஜாதகர் மரணிப்பதற்கு பதிலாக நல்ல புதிய வேலை கிடைக்கின்றது.

அப்பொழுது தான் எனக்கு பல விஷயங்கள் புரிந்தது.

மரணம் என்பது முடிவல்ல அது ஒரு ஆரம்பம்.
திருமணம் என்பது ஒரு ஆரம்பம்
வேலை என்பது ஒரு ஆரம்பம்
0 என்பது முடிவல்ல ஆரம்பம்

7 ஆவது ஸ்தானத்தை மாறாக ஸ்தானம் என்று ஏன் கூறுகின்றார்கள் என்று முற்றிலுமாக புரிந்தது.

7 என்பது லக்கினத்திற்கு(1) அப்படியே எதிரில் உள்ள கட்டம்.

7 என்பது கான்ட்ராக்ட் அதாவது ஒப்பந்தம்.

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம்.
வேலை என்பது ஒரு ஒப்பந்தம்
வியாபாரம் என்பது ஒரு ஒப்பந்தம்.

எனவே ஒரு ஒப்பந்தப்படி அந்த வேலை முடியும் வரை அதை விட்டு செல்ல முடியாதல்லவா.

இந்த புதிய ஒப்பந்தம் லக்கினத்தை அதாவது ஜாதகரின் மரணத்தை தள்ளி போடுகின்றது.

எனவே தான் மரணத்தை தள்ளி போட அக்காலத்தில் ஜோதிடர்கள் இளம் பெண்களை திருமணம் செய்ய ஆயுள் கண்டம் உள்ளவர்களுக்கு பரிந்துரைதிருக்கின்றார்கள்.

அமைதிபடை படத்தில் அப்பா சத்யராஜ், ரஞ்சிதாவை திருமணம் செய்யும் காட்சி இருக்கும்.

கோ படத்தில் வில்லன் ஒரு சிறுமியை திருமணம் செய்யும் காட்சி இருக்கும்.

சினிமா காரங்க எல்லாம் பழம் திண்ணு கொட்டை போட்டவங்கன்னு இப்ப தான் தெரியுது.

அந்த காலத்துல பல மனைவிகளை கட்டுனதும் ஏன் அப்படின்னு இப்ப புரியுதா.

சரி சரி இதை படிச்சுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கிளம்பிடாதீங்க. சரியா

அதுக்கு பதிலா பூமிக்கு பாரமா இல்லாம பொய் சேர்ந்துடலாம். இல்ல பூமிக்கு உபயோகமா நல்ல வேலை ஏதாவது செய்யலாம்.

அவரவர் கும்பிடும் தெய்வங்களை வேண்டி மரணத்தை தள்ளி போடுவது என்பது நமது வாழ்வில் நாம் தினமும் பார்க்கும் கண்கூடு. உண்மையில் இறைவன் நமது வேண்டுதலை ஏற்று 7 ஆம் இடத்தில் புதிய ஒப்பந்தம் போடுகின்றார் என்றே கொள்ள வேண்டும். எனவே தெய்வத்தை சரணடையுங்கள்.

அன்புடனும்,
வாழ்த்துகளுடனும்,

ஆரோக்கிய பாக்கிய நாதன் L
exactpredictions.in
bakkianathan.com

About the Author:

Leave A Comment