தசா புத்தி பலன்கள்

தசா புத்தி பலன்கள் பார்க்க பொது விதிகள்

புத்தி நாதர்களாகிய கிரகங்கள், தசா நாதனுக்கு நட்பும், சமமும் அனால் நற்பலன். பகை கிரகம் அனால் பலன் கெடும்.

புத்தி நாதன் ஜனன காலதில் அமர்ந்த வீடானது கேந்திர, திரிகோண, நட்பு ஆட்சி உச்சமாகில், துர்பலன்ங்கள் எல்லாம் நற்பலன் ஆகும்.

புத்தி நாதன் ஜனன காலதில் அமர்ந்த வீடானது கேந்திர, திரிகோண, நட்பு ஆட்சி உச்சமாகில், கூட பாபர்கள் புத்தி நாதர்கள் ஆகினால் சமபலன்களையே தருவார்கள்.

புத்தி நாதன் ஜனன காலதில் அமர்ந்த வீடானது சாஸ்டாஷ்டகம், மறைவிடம், அஸ்தமனம், பகை, நீசங்கள் பெற்றிருந்தால் நற்பலன்கள் எல்லாம் துர்பலன் ஆகும்.

புத்தி நாதன் ஜனன காலதில் அமர்ந்த வீடானது சாஸ்டாஷ்டகம், மறைவிடம், அஸ்தமனம், பகை, நீசங்கள் பெற்றிருந்தால் கூட புத்தி நாதர்கள் சுபர்களாக இருந்தால் நன்மையையும், தீமையும் கலந்த பலன்களை தருவார்கள்.

புத்தி நாதன் ஜனன காலதில் அமர்ந்த வீடானது சாஸ்டாஷ்டகம், மறைவிடம், அஸ்தமனம், பகை, நீசங்கள் பெற்றிருந்து கூட பாபர்களுடன் கூடியாவது, பார்வையாவது கொண்டிருந்தால் அக்காலத்தில் விசேஷ கெட்ட பலன்களை தருவார்கள்.

புத்தி நாதன் ஜனன காலதில் அமர்ந்த வீடானது சாஸ்டாஷ்டகம், மறைவிடம், அஸ்தமனம், பகை, நீசங்கள் பெற்றிருந்து கூட சுபருடன் கூடி அல்லது சுபர்கள் பார்வை இருப்பினும் சமபலனை தருவார்கள்.

புத்தி கிரகங்கள் இரண்டேழுக்குடையவராயும் அல்லது அங்கு இருந்தும், பகைவர் அல்லது பாபிகள் பார்வையுற்றாலும் தேக அழிவுக்கே காரணமாகும். இவ்வாறு இருந்து சுபருடன் கூடினும் அல்லது சுபர் பார்வையுரினும், அக்காலத்தில் அற்ப வியாதி உண்டாகி நீங்கும்.

தசா நாதனும், புத்தி நாதனும் முறையே 1 மற்றும் 6 அல்லது 1 மற்றும் 8 அல்லது 6 அல்லது 8 நிலைகளில் இருந்தால் கெட்ட பலன்களையே தருவார்கள்.


சூரிய மகாதசை

சூரிய தசை - சூரிய புக்தி

இராஜ பயம், மனைவி மக்களுக்கு வியாதி, வியாதி: மார்பு, முகம், வயிறு இவற்றில் நோய் உண்டாதல், வாத சிலோதும நோய்கள் உண்டாதல். உற்றார் பகை

சூரிய தசை - சந்திர புக்தி

வீடு மனை மக்கள் சுகம், பொருள் வரவு, பூமி லாபம், வியாபார விருத்தி, மனமகிழ்ச்சி, இராஜ அனுகிரகம், புத்திரி உண்டாதல்.

சூரிய தசை - செவ்வாய் புக்தி

காரியா காரியங்களில் தடை, ஜனப் பகை, பசு தனங்கள் நஷ்டம், அக்கினி பயம், ஆயுத பயம், அலைச்சல், ஊர் விட்டு ஊர் போகுதல், மானக்கேடு

சூரிய தசை - இராகு புக்தி

உற்றார் பகை, இராஜ பயத்தால் பொன் பூமி தன நஷ்டம், அனல் ஜுரம், விஷ உபாதை, கையில் ரணபாதை, மனோவிசாரம்,

சூரிய தசை - குரு புக்தி

முன் நஷ்டம், பொருள் கைக்கு சேரல், பகைவர் வணக்கம், இராச விசுவாசம், பசு கன்றுகள் விருத்தி, கீர்த்தி, தேக ஆரோக்கியம்

சூரிய தசை - சனி புக்தி

வியாபாரத்திலும் பூமியிலும் அற்ப லாபம், குடும்பத்தில் வியாதி, தன தானியங்கள் நஷ்டம், உறவினர்கள் கலகம், பிரயாணத்தில் தடை உண்டாதல்

சூரிய தசை - புதன் புத்தி

வித்தை விருத்தி, மனமகிழ்ச்சி, நல்லோர் உறவு, தார புத்திராதிகள், சுகம், வஸ்திர, ஆபரண லாபம், இராஜ போகம் அனுபவித்தல்

சூரிய தசை - கேது புக்தி

பந்துஜன சூதக பாதை, மனகிலேசம், மனையாள் வியாதி, ராஜ பயம், விஷம், ஆயுதம், திருடர் இவைகளால் பயம்,

சூரிய தசை - சுக்கிர புக்தி

பூமி வாகனம், பொன் முதலியவைகளால் லாபம், காரியானுகூலம், பசு கன்று விருத்தி, இராஜ போகம் உண்டு, அற்ப பகையும் உண்டாகும்


சந்திர மகாதசை

சந்திர தசை – சந்திர புக்தி

எல்லாக் காரியங்களிளும் அனுகூலம், விவாகம், தன தானிய விருத்தி, செய்தொழிலில் லாபம், உத்தியோகா விருத்தி, ராஜ விசுவாசம், சுக போஜனம்

சந்திர தசை – செவ்வாய் புக்தி

உஷ்ண ஜுரம், பூத வேதனை, வீண் வழக்கு, தார புத்திரர்களுக்கு வியாதி, திருடர் பயம், அக்கினி பயம்

சந்திர தசை – ராகு புக்தி

பூத பீடை, சர்ப்ப பயம், தேகத்தில் காயம், குடும்பத்தில் இறந்து தான் தனித்து இருத்தல், தன நஷ்டம், பலவித துன்பங்கள், திருடரால் நஷ்டம்,

சந்திர தசை – குரு புக்தி

தரும புக்தி, தன தானிய விருத்தி, இராஜ சாமான சுகம், கிருஷி விருத்தி, கௌரவம், நற்கீர்த்தி, தேக ஆரோக்கியம், தேவதா பக்தி

சந்திர தசை – சனி புக்தி

காரிய பங்கம், பசி வேதனை, துஷ்டர் உறவு, காலில் வியாதி, வீண் வழக்கு, சிறைப்படல், மானக்கேடு, பகைவரால் துன்பம், இராஜ பயம்

சந்திர தசை – புதன் புக்தி

வியாபார மூலத்தால் தனவரத்து, பெருத்த வியாபாரிகள் நேசம், வித்தை விருத்தி, எல்லோரும் புகழும் நிலைமை, பொன் பொருள் லாபம், தேவதை அனுகிரகம்

சந்திர தசை – கேது புக்தி

தாய் தந்தையர்களுக்கு அற்ப கண்டம், கை கால்களில் வியாதி, தன் நிலை கெடுதல், வீண்பழி, தான் தொட்ட வஸ்து நாசம், திருடர் மற்றும் ஆயுதத்தால் பயம்,

சந்திர தசை – சுக்கிர புக்தி

போசன சுகம், சந்தோஷம், புத்திர லாபம், பாவ நிவர்தனம், நற்கீர்த்தி, பொன், வெள்ளி லாபம், ராஜானுகிரகம், வாணிபம், பூமி பலிதம்

சந்திர தசை – சூரிய புக்தி

குன்ம நோய், மூத்திர கழிச்சல், பல்வலி, கண்நோய் வாதம் மற்றும் பித்தத்தால் சுக குறைவு அலைச்சல், பலவித துன்பங்கள். வீண் கோபம், மனோவிசாரம்


செவ்வாய் மகாதிசை

செவ்வாய் தசை – செவ்வாய் புக்தி

வைசூரி, சுரம், குஷ்டம், பலக்குறைவு, இரத்த காயப்படல், திருடரால் பொருள் நஷ்டம், வீட்டில் குழந்தைக்கு அரிட்டம். மனையாளைப் பிரிதல், தொழில் கெடுதல்

செவ்வாய் தசை – இராகு புக்தி

இராஜபயம், தேசசஞ்சாரம், ஜனங்கள் வஞ்சனை, பில்லி சூநியங்களால் தன காரியங் கெடுதல், உறவினர் பகை, மன விசாரம்,

செவ்வாய் தசை – குரு புக்தி

சௌரிய விருத்தி, தன தானிய செல்வம் செருதல், ஜன மகிழ்ச்சி, வேளாண்மை விருத்தி, வஸ்திராபரன லாபம், இராஜ விசுவாசம்

செவ்வாய் தசை – சனி புக்தி

சத்துரு ஜன பீடை, அழுகை, சுற்றத்தாரிடம் நஷ்டம், தேக வியாதி, இராஜ விசுவாசம், தாசி ஜனங்களால் பொருள் நஷ்டம், ஈனத் தொழில் புரிதல்,

செவ்வாய் தசை – புதன் புக்தி

தரும சிந்தனை, சுக போஜனம், வஸ்திர வாகன லாபம், தேக சௌக்கியம், பொன் பூமி வரவு, வித்தை, லாபம், சத்துரு ஜெயம், நற்கீர்த்தி

செவ்வாய் தசை – கேது புக்தி

வாக்கு, ஜபம், தவம் கெடுதல், வார்த்தையால் ஜன விரோதம், பொருட்சேதம், நீசரால் கலகம், மலைச்சாரல், பூமியில் சஞ்சாரம், ஊரார் பகை

செவ்வாய் தசை – சுக்கிர புக்தி

நற்கீர்த்தி, பரிமள சுகந்த லாபம், தான தரும செயல், சுக போகம், உலகத்தார் புகழ்ச்சி, பகைவரை உபாயத்தால் ஜெயித்தல், தனதானிய விருத்தி

செவ்வாய் தசை – சூரிய புக்தி

ஆண் குழந்தைக்கும், மனையாளுக்கும், தனக்கும் ஜுரத்தால் பீடை பயமான சொப்பனம் கானல், அகால போஜனம், கடன் பாதை, உறவோர் பகை

செவ்வாய் தசை – சந்திர புக்தி

ஞான விருத்தி, சிவபூஜையில் பற்று, தேக ஆரோக்யம், வாயுவால் உபாதை, சினேகர், மனையாள் அற்ப பகை, செய்தொழில் முடக்கம்


இராகு மகாதசை

ராகு தசை – ராகு புக்தி

மன்னர், ஆயுதம், மிருகம் இவற்றால் பயம், முகத்தில் வியாதி, அடிமையாள் பீதி, மனையாள் மரணம், தன நாசம், இருப்பிடம் மாறும், கொடும் பிணி,

ராகு தசை – குரு புக்தி

திரவிய பூஷணாதிகள், லாபம், ஆளடிமை அமையும், பசு கன்றுகள் வாய்க்கும், செய்தொழில் பலிதம், கேட்ட விடத்தில் பொருள் கைகூடும், கீர்த்தி பெருகும்

ராகு தசை – சனி புக்தி

வாகனம், மரத்திலிருந்து கீழே விழுதல், மானக்கேடு, துர்புத்தி, துர் ஜன நேசம், கொடும் பகை, மனையில் உபாதை, தொடையில் ரணம், பொன் பொருள் நாசம்,

ராகு தசை – புதன் புக்தி

மனையில் நற்காரியம் செய்தல், பொருள் சேர்கை, மைந்தர் உண்டாதல், ஜன விசுவாசம், பூமி லாபம், கிருஷி விருத்தி, சத்ருக்கள் மித்திரராவர்

ராகு தசை – கேது புக்தி

வீட்டில் கொள்ளை போதல், திரவியம் சிதறும், அகால போஜனம், மனக்கலக்கம், வேந்தர் பகை

ராகு தசை – சுக்கிர புக்தி

பூமி, பொன் பொருள், மனை மைந்தர், பசு லாபம், தேவாலய கோபுர தரிசனம், தரும காரியம் செய்தல், மனமகிழ்ச்சி, சம்பத்து விருத்தி,

ராகு தசை – சூரிய புக்தி

உஷ்ணத்தால் தலைபாரம், தேக பீடை, வீடு தாரங்களை பிரிதல், தீர்த்தயாத்திரை, கைபொருளும் பூமியும் நஷ்டம்,

ராகு தசை – சந்திர புக்தி

உயரத்திலிருந்து வீழ்தல், தான்ய விருத்தி, மனைவி மக்கள் சுகம், ராஜ சன்மானம், கடல் போல் செல்வம் உண்டாதல், நல்வாக்கு ஜனப் ப்ரீதி,

ராகு தசை – செவ்வாய் புக்தி

விசேசக் கோபம், சுபகாரிய புக்தி, செய்தொழில் விருத்தி, நிந்தைக்காலாதல், துர்புக்தி உண்டாகும், பைத்திய வியாதி, விஷம், அக்கினி பயம்,


குரு மகாதிசை

குரு தசை – குரு புக்தி

தன தான்யம், ஆளடிமை, வெகுஜன ப்ரீதி, யக்ஞ யகாதிகள் சேவை, சிவா பூஜையில் ப்ரீதி, ராஜமூல காரியங்கள், பொன் வெள்ளி லாபம்,

குரு தசை – சனி புக்தி

மன்னர் கோபம், மித்திர பேதம், வீண் பழிக்குரிய தலையிடல், ஜீவ பயம், தொடையில் வியாதி, பூமிபொருள் நஷ்டம், நீசர் பகையாகும்,

குரு தசை – புதன் புக்தி

சுகந்தம், வஸ்திரம், பூமி லாபம், பந்துஜன கல்யாணம், நன்மையுண்டாதல், பெரும் சமுத்திர வியாபாரத்தால் தன லாபம், புத்திரப் பேருமுண்டாம்.

குரு தசை – கேது புக்தி

தனதான்னிய நாசம், மைந்தர்கள் பீடை, பிராமணர் பகை, ஆயுதம், விஷம், ஆயுதம், நீசர், அரசர், திருடர் இவர்களால் பயம், பலவழியில் நஷ்டம்,

குரு தசை – சுக்கிர புக்தி

தெய்வப் பிராமணர் பக்தி, செல்வ விருத்தி, நற்கீர்த்தி, அரசு வழியாக பொன் பூமி சேர்கை, ஸ்திரி ஜன சேர்கை உறவுமுண்டாம்.

குரு தசை – சூரிய புக்தி

சுயத்தொழில் நாசம், திரவிய லாபம், சுற்றத்தார், பகைவர் சேவை, சிரசிலும், கண்ணிலும் வியாதி அலைச்சல்,

குரு தசை – சந்திர புக்தி

பூமி வஸ்திரம், பொருள் வாணிகம் இவைகள் விருத்தி மற்றும் லாபம், புது நேசர் வரவு, மனமகிழ்ச்சி, இராஜ யோகம், போஜனம், கல்வி ஞானம் உண்டாகும்,

குரு தசை – செவ்வாய் புக்தி

மிருக பாதையால் ரணம், தேகத்தில் தீர்க்க வியாதி, இடம் மாறுதல், திருடராலும், ஆயுதத்தாலும் பயம், பொருள் சிதறல், வெகுசஞ்சலமாகும்

குரு தசை – இராகு புக்தி

தேக சுகமின்மை, நீசருரவு அதிகம், நிந்தை, அவமானம்,


சனி மகாதசை

சனி தசை – சனி புக்தி

பொருள் நஷ்டம், சத்துரு பயம், பிசைகுப்புகும் புக்தி, முகத்திலும், அறையிலும் சந்தி நோய், செய்தொழில் கெடுதல், பொய்யனென பெயர்

சனி தசை – புதன் புக்தி

பூமி லாபம், தன தானிய லாபம், குருபக்தி சேவை, ராஜாங்கத்தில் வெற்றி,

சனி தசை – கேது புக்தி

அகால போசனம், தேசந்திரிதல், சேஷம வியாதி, காரிய நாசம், கெட்ட கனவு கானல், விடா நோயால் தேக இளைப்பு உண்டாகும்.

சனி தசை – சுக்கிர புக்தி

ஸ்திரிகளால் உண்டாகும் நோய்கள் தோற்ற வாய்ப்பு, நேசர் பகை, தேவதா பயம், கீதப் பிரியம், கல்யாணம், கிருஷி, அடிமையாள் புதுமையாய் வாய்க்கும்,

சனி தசை – சூரிய புக்தி

பெரியோர் பகை, மனஸ்தாபம், தேகத்தில் பீடை, உற்றார் பகை, மனக்கலக்கம், தேக சஞ்சாரம், திருடர் பயம்,

சனி தசை – சந்திரன் புக்தி

தேவப் பிராமணர் பக்தி, மனையாளும், மைந்தரும் சுகம், சம்பத்துண்டாகும், தான தரும புத்தி, உற்றாரும் பகைவரும் வனங்கல், அடிமை ஆள் வழக்கு,

சனி தசை – செவ்வாய் புக்தி

தன்னிகரான ஜனகளார்பகை, தன்னிலை கெடுதல், நேத்திர வியாதி, ஆயுதங்கள், அக்கினி இவற்றால் ரண பாதை, கை கால்களில் வியாதி,

சனி தசை – ராகு புக்தி

குட்டம், நேத்திர ரோகம், சித்தப்பிரமை, தேகத்தில் புழுவுள்ள ரணங்கள், பொருள் நஷ்டம், சோம்பல், பிராண சங்கடம், சிறை விலங்கு படல்,

சனி தசை – குரு புக்தி

பவளம், வஸ்திராபரணம். வாகன லாபம், கோவில் தடாக தருமம், ராஜபூசிதம், பகை வெல்லல், மனைவி, மைந்தர் அமைதல், வாணிபமும், சுகமும் உண்டாம்,


புதன் மகாதசை

புதன் தசை – புதன் புக்தி

ஞான விருத்தி, சாத்திரக் கேள்வி, பொன் தன தானிய லாபம், உலகத்தோர் பிரீதி, வேளாண்மை மிகும், தொழில் விருத்தி, கல்யானாதி சுபங்கள்

புதன் தசை – கேது புக்தி

மரண பயம், நண்பர் பகை, கண்நோய், வஞ்சனை, கடன், அக்கினியாலும், அரசாராலும் பயம். பூமி, வீடு நஷ்டம்

புதன் தசை – சுக்கிர புக்தி

தனம், வஸ்திராபரணம், பிள்ளை பேரு உண்டாகும், கடன் தீர்த்தல், பலவித தொழில் விருத்தியினால் லாபம், வித்தை, மனையாள் சுகம், பகை முடித்தல்,

புதன் தசை – சூரிய புக்தி

சிரசில் வியாதி, கண்ணீர் பித்த நீரிரங்கள், பெரியோர் கலகம், பூமி, கன்று காலிகள் திருட்டு போதல், தெய்வ பயம், செல்வம் குறையும்,

புதன் தசை – சந்திர புக்தி

செல்வ விருத்தி, தேவதா பூசை, பகைவர் வணக்கம், மித்திரர் மூலமாக லாபம், நினைத்த காரிய சித்தி, மனைவி மக்கள் சுகம், தேக ஆரோக்கியம் உண்டாம்,

புதன் தசை – செவ்வாய் புக்தி

அலைச்சல், தன நஷ்டம், பகைவர் சண்டை, அக்கினி, ஆயுத பலம், சிரசில் ரணம், தாப ஜுரத்தால் பயம், வாகனம், பூமி நஷ்டம்

புதன் தசை – ராகு புக்தி

வாணிபத்தில் அற்ப லாபம், கள்ளரால் செலவு, விசத்தால் பயம், தேக வியாதி, செல்வக் குறைவு, தொழில் நஷ்டம், பலவித துன்பம்,

புதன் தசை – குரு புக்தி

வேளாண்மை சௌக்க்கியம், சிவா சக்தி பூசைகளில் விருப்பம், மைந்தர் விளையாட்டுகளை கண்டு மகிழ்தல், பகைவரை சபித்தல், அபுரூப பொருள் வரவு,

புதன் தசை – சனி புக்தி

தெய்வம் – பிராமணரை நிந்தித்தல், தாழ்ந்த தொழில் புரிதல், இவ்வித தோஷத்தால் உறவு நஷ்டம், பூமி பொருள் விரயமாம்.


கேது மகா தசை

கேது தசை – கேது புக்தி

திருடர் பயம், வைசூரி, கால், கைகளில் காயம் படல், உடல் இளைத்தல், அக்கினி உபாதை, உயர்ந்தவர் பகை, வாணிபம், பூமி நஷ்டமாகும்,

கேது தசை – சுக்கிர புக்தி

மனை – மக்கள் – மனையாள்கள் சௌக்கியாம், நன்னடகை, பழமையாகிய பூமி, வாணிபமும் பணிதல், எடுத்த காரியங்கள் ஜெயமாகும்.

கேது தசை – சூரிய புக்தி

ஜுரத்தால் பயம், மனதுக்கம், தன நஷ்டம், பிதா மற்றும் உற்றவர்க்கு அரிட்டம், ராஜ மூலத்தில் கட்டுண்டல்,

கேது தசை – சந்திர புக்தி

முன் தோன்றிய வியாதி நாசம், போர் ஜெயித்தால், தேவதாபக்தி, வாய்த்த பொருள் நஷ்டம், வாயுவினால் வியாதி, பெண்கள் வழக்கு, தன புத்தியால் செய்தொழில் லாபம்,

கேது தசை – செவ்வாய் புக்தி

திருடராலும்-பகைவராலும்-அபமிருதுவாலும் பயம், பந்துகளால் நஷ்டம், பரதாரதினால் குற்றம், தன விரயம், மனதுக்கம், செய்தொழில் கெடும்,

கேது தசை – இராகு புக்தி

குதிரை – பசுகன்று நஷ்டம், சத்துரு பீடை, ராஜ பயம், உலகும் பயக்கும், வாணிபங் கெடும், காலில் பந்தமுன்டாகும்

கேது தசை – குரு புக்தி

பூமி லாபம், காலியான முடிதல், சத்துரு நாசம், நற்கீர்த்தி, தேவாத பூசை, மன்னர் நேசம், தன தானிய லாபங்களுன்டாகும்,

கேது தசை – சனி புக்தி

தேக சஞ்சாரம், பசு-தன நஷ்டம், மனையாள் பகை, ஆயுத பயம், மருந்துண்ணல், பலவித துன்பங்களாம்,

கேது தசை – புதன் புக்தி

இராஜ சௌக்கியமுண்டாகும், வாகன லாபம், சாது ஜன ரக்ஷ்சனை, நஷ்டமான தனம் பூமிகள் கூடிவரல், பகைவரவு, சம்பத்துண்டாகும்


சுக்கிர மகா தசை

சுக்கிர தசை – சுக்கிர புக்தி

மன்னர் சாமன பூசன சுகம், புத்திர விருத்தி, தன தானிய விருத்தி, நல்ல யோசனை, ஞானம், முன் நஷ்ட பூமி லாபம், மனமகிழ்ச்சி, சுபங்களுமுண்டாம்

சுக்கிர தசை – சூரிய புக்தி

தலை நோய், கண்வழி, குரு தரிசனம், காரியக்கேடு, இதர ஜனங்களால் லாபம், இராஜ பயம், அக்கினியால் நஷ்டம், ஆளடிமையாதல்

சுக்கிர தசை – சந்திரன் புக்தி

கெட்ட ஸ்திரி போகம், தனவிரயம், தொழில் கெடுதல், தரித்திரம், நஷ்டம், பின்னல் நற்பொருள் வரவு, சகல சுகமுண்டாகும்,

சுக்கிர தசை – செவ்வாய் புக்தி

துணைவரும் பந்துகளும் நாசம், வியாதி விருத்தி, பெண்டிரும் – மக்களும் வேறாதல், தன தானியமும் பணமும் நஷ்டமாம்

சுக்கிர தசை – இராகு புக்தி

தேக பீடை, துர்ச்சனர் நேசம், அன்புளார் நாசம், தன தானிய பசுவும் சேதம், புத்திரர்-மனையாளுக்கும் கண்டம்

சுக்கிர தசை – குரு புக்தி

விவாகமாகுதல், மைந்தர்சுகம், ராஜ சன்மானம், செய்தொழிலில் விசேஷ லாபம், எடுத்த காரியம் வெற்றி,

சுக்கிர தசை – சனி புக்தி

மூர்கரால் கட்டுண்டல், பிராண சங்கடம், பிச்சை எடுத்தால், ஆசார குறைவு, பின்னால் வாக்கு நாணயம், நஷ்டப் பொருள் சேரும், சுகமுண்டாகும்,

சுக்கிர தசை – புதன் புக்தி

ராஜ பூஜிதம், வாகன சுகம், தெய்வப் பிராமணர் சேவை, அயல் ஸ்திரி சம்போகம், முத்துமணியாபரன லாபம்,

சுக்கிர தசை – கேது புக்தி

நன்மையுரைகிலும் தீமையாய் விளங்கும், நாற்கால் ஜீவநாசம், விகட சாஸ்திரம் படித்தல், போற்றும் தெய்வத்தை வெறுத்தல், உறவையும், குருவையும் நிந்தித்தல்