திருமணம் எப்போது நடக்கும்


ஒருவருக்கு திருமணம் எப்போது நடக்கும் என்பதனை அறிய ஜோதிடத்தில் பல வழிகள் உண்டு.

அந்த வகையில் நாடி முறை என்ற ஒரு கணிதம் பல ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் படிக்க கிடைத்ததது.

அந்த முறை முழுதும் ஒரு கணித சமன்பாடு ஆகும்.

அந்த முறையினை ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்கு மேல் பரிட்சித்து பார்த்ததில் 97% மேல் துல்லியமாக எந்த வருடத்தில் திருமணம் நிகழும் / நிகழ்ந்தது என்று அறிந்து கொள்ள முடிந்தது.

அந்த கணிதத்தை இங்கு விளக்குகின்றேன்.

இந்த கணிதம் https://exactpredictions.in/ தளத்தில் 5 வருடங்களுக்கு மேலாக இலவச பயன்பாட்டில் உள்ளது.





சரி இந்த முறையில் எவ்வாறு திருமண வயதை கணக்கிடுவது என்று பாப்போம்

கணிதம் முறை 1



Step 1: உங்கள் பிறந்த லக்கினத்தின் டிகிரியை எடுத்து கொள்ள வேண்டும்.

Step 3: லக்கின டிகிரியை டெசிமல் (decimal) மாற்றி கொள்ள வேண்டும். சில பஞ்சாங்கங்களில் டெசிமல் மதிப்புகள் நேரடியாகவே கிடைக்கும்

Step 3: லக்கின டெசிமல் மதிப்பினை 324 என்ற என்னுடன் பெருக்க வேண்டும். இதனை (ascendant root value) என்று கொள்ளுங்கள். இந்த மதிப்பை தனியாக வைத்து கொள்ளுங்கள்

Step 4: அடுத்து ராசி மண்டலத்தில் 360 டிகிரிக்கு உள்ளது அல்லவா? அதனை 9 ஆல் பெருக்கி வைத்து கொள்ளுங்கள் . அதாவது (360 * 9 = 3240). இதனை (three sixty multiply nine) என்று கொள்ளுங்கள். இந்த மதிப்பை தனியாக வைத்து கொள்ளுங்கள்

Step 5: இப்பொழுது ascendant root value மற்றும் three sixty multiply nine ஆகிய இரண்டு மதிப்புகளையும் கூட்டுங்கள். கிடைக்கும் மதிப்பை மொத்த நாட்களாக கணக்கில் கொள்ளுங்கள்.அதாவது (total days) என்று கொள்ளுங்கள்

Step 6: இப்பொழுது total days மதிப்பை 365 ஆல் வகுத்தால் நமக்கு வயது கிடைக்கும்.

Step 7: வயதின் மதிப்பு பிறகு, அதில் மீதம் உள்ள டெசிமல் பகுதியை தனியாக எடுத்து 12 என்ற மாத என்னுடன் பெருகினால் மாதங்கள் கிடைக்கும்

Step 8: மாதங்களை கண்டு பிடித்த பிறகு, அதில் மீதம் உள்ள டெசிமல் பகுதியை தனியாக எடுத்து 365 உடன் பெருக்கி 12 ஆல் வகுக்க நாட்கள் கிடைக்கும்.

இப்படியாக உங்களுக்கு திருமணம் எந்த வயதில், மாதத்தில் நாட்களில் நடக்கும் என்ற கணிப்பு கிடைக்கும்

இப்பொழுது உங்களுக்கு கிடைத்து இருப்பது உங்கள் பிறந்த வயதில் இருந்து எந்த வயதில் உங்களுக்கு திருமணம் நடக்கும் என்ற முதல் நிகழ்தகவு பரவல் (probability) ஆகும். அதாவது இந்த வயதில் திருமணம் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று பொருள்.

இப்பொழுது இதற்கு அடுத்து எந்தெந்த வயதுகளில் உங்களுக்கு திருமணம் நடக்கும் என்று கண்டு பிடிக்க பின்வரும் படி நிலைகளை கையாளுங்கள்.

Step 8: முன்பு சொல்லப்பட்ட Step 4 பகுதியில் (360 * 9 = 3240).வைத்து கொண்டோம் அல்லவா. இப்பொழுது அங்கு (3240 * 2) என்று கொள்ள வேண்டும். அடுத்த படி நிலைகளை இந்த மதிப்பை வைத்து தொடர்ந்து செய்ய வேண்டும். இது போல் (3240 * 2) , (3240 * 3) , (3240 * 4) ,(3240 * 5) etc. அடுத்தடுத்த வாய்ப்புகளை கண்டு பிடித்து கொள்ளலாம்

இதுவரை நாம் மேற்சொன்னது நாடி முறையில் ஒரு வழிமுறை.

இதே நாடி முறையில் இரண்டாவது ஆகவும் ஒரு கணக்கீட்டு முறை உண்டு.

கணிதம் முறை 2



Step 1: உங்கள் பிறந்த லக்கினத்தின் டிகிரியை எடுத்து கொள்ள வேண்டும்.

Step 3: லக்கின டிகிரியை டெசிமல் (decimal) மாற்றி கொள்ள வேண்டும். சில பஞ்சாங்கங்களில் டெசிமல் மதிப்புகள் நேரடியாகவே கிடைக்கும்

Step 3: லக்கின டெசிமல் மதிப்பினை 216 என்ற என்னுடன் பெருக்க வேண்டும். இதனை (ascendant root value) என்று கொள்ளுங்கள். இந்த மதிப்பை தனியாக வைத்து கொள்ளுங்கள்

Step 4: அடுத்து ராசி மண்டலத்தில் 360 டிகிரிக்கு உள்ளது அல்லவா? அதனை 7 ஆல் பெருக்கி வைத்து கொள்ளுங்கள் . அதாவது (360 * 7 = 2520). இதனை (three sixty multiply seven ) என்று கொள்ளுங்கள். இந்த மதிப்பை தனியாக வைத்து கொள்ளுங்கள்

Step 5: இப்பொழுது ascendant root value மற்றும் three sixty multiply seven ஆகிய இரண்டு மதிப்புகளையும் கூட்டுங்கள். கிடைக்கும் மதிப்பை மொத்த நாட்களாக கணக்கில் கொள்ளுங்கள்.அதாவது (total days) என்று கொள்ளுங்கள்

Step 6: இப்பொழுது total days மதிப்பை 365 ஆல் வகுத்தால் நமக்கு வயது கிடைக்கும்.

Step 7: வயதின் மதிப்பு பிறகு, அதில் மீதம் உள்ள டெசிமல் பகுதியை தனியாக எடுத்து 12 என்ற மாத என்னுடன் பெருகினால் மாதங்கள் கிடைக்கும்

Step 8: மாதங்களை கண்டு பிடித்த பிறகு, அதில் மீதம் உள்ள டெசிமல் பகுதியை தனியாக எடுத்து 365 உடன் பெருக்கி 12 ஆல் வகுக்க நாட்கள் கிடைக்கும்.

இப்படியாக உங்களுக்கு திருமணம் எந்த வயதில், மாதத்தில் நாட்களில் நடக்கும் என்ற கணிப்பு கிடைக்கும் இப்பொழுது உங்களுக்கு கிடைத்து இருப்பது உங்கள் பிறந்த வயதில் இருந்து எந்த வயதில் உங்களுக்கு திருமணம் நடக்கும் என்ற முதல் நிகழ்தகவு பரவல் (probability) ஆகும். அதாவது இந்த வயதில் திருமணம் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று பொருள்.

இப்பொழுது இதற்கு அடுத்து எந்தெந்த வயதுகளில் உங்களுக்கு திருமணம் நடக்கும் என்று கண்டு பிடிக்க பின்வரும் படி நிலைகளை கையாளுங்கள்.

Step 8: முன்பு சொல்லப்பட்ட Step 4 பகுதியில் (360 * 7 = 2520). வைத்து கொண்டோம் அல்லவா. இப்பொழுது அங்கு (2520 * 2) என்று கொள்ள வேண்டும். அடுத்த படி நிலைகளை இந்த மதிப்பை வைத்து தொடர்ந்து செய்ய வேண்டும். இது போல் (2520 * 2) , (2520* 3) , (2520 * 4) ,(2520 * 5) etc. அடுத்தடுத்த வாய்ப்புகளை கண்டு பிடித்து கொள்ளலாம்.

மேற்சொன்ன இந்த கணிதங்களை நீங்கள் கைகளால் போடுவதற்கு நேரம் பிடிக்கும். இவற்றை ஒரு நொடியில் கண்டு பிடிக்க https://exactpredictions.in/ தளத்தில் திருமணம் நிகழ அதிகம் வாய்ப்பு உள்ள காலங்கள் என்ற இலவச ரிப்போர்ட் உள்ளது. அதில் அறிந்து கொள்ளுங்கள்.

நன்றி

குரு பாக்கியநாதன்